வியாழக்கிழமை, அக்டோபர் 31, 2024

விவாகரத்து நடிகருடன் 2ம் திருமணத்திற்கு தயாரான பிரபல நடிகை.. எச்சரிக்கும் பாதிக்கப்பட்ட ஹீரோயின்கள்

மலையாள திரையுலகில் இருந்து தமிழுக்கு வந்தவர் அந்த பிரபல நடிகை. வந்த வேகத்திலேயே இவர் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடியாக நடித்து அதிக அளவில் பிரபலம் ஆனார். அதோடு மறைந்த முன்னாள் நடிகையின் வாழ்க்கை பற்றிய திரைப்படத்திலும் நடித்து ஏராளமான புகழை பெற்றார்.

பிறகு நடிகையை சில காலங்கள் வரை எந்த திரைப்படத்திலும் காண முடியாமல் போனது. இதனால் நடிகைக்கு என்ன ஆனது என்று பலரும் குழம்பி வந்த நிலையில் அவரோ தன் உடல் எடையை பாதியாக குறைத்து அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்தார்.

இதற்கு என்ன காரணம் என்று பார்த்தால் நடிகை அந்த ஒல்லி நடிகருடன் மிகவும் நெருக்கமாக இருக்கிறாராம். அதனால்தான் அவருக்கு பொருத்தமாக இருக்கவேண்டும் என்று குண்டாக இருந்த உடலை குறைத்து இப்படி ஸ்லிம்மாக மாறி இருக்கிறாராம்.

அதுமட்டுமில்லாமல் நடிகை அவரைத்தான் திருமணம் செய்து கொள்வது என்று உறுதியாக இருக்கிறாராம். இதைபற்றி கேள்விப்பட்டவர்கள் நடிகைக்கு நெருக்கமானவர்களிடம் விசாரித்தால் அதெல்லாம் இல்லை என்று மழுப்பி வருகிறார்களாம்.

ஆனாலும் சமீபகாலமாக நடிகையின் போக்கு அதை அப்படியே உறுதி செய்கிறது. இதை அறிந்த நடிகரால் பாதிக்கப்பட்ட பாடகி நடிகை உள்ளிட்ட சிலர் சம்பந்தப்பட்ட நடிகையை எச்சரித்து வருகிறார்களாம். சமீபத்தில்கூட பிரபல நடிகையின் விவாகரத்துக்கு இந்த நடிகர் தான் காரணம் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் நடிகரைப் பற்றி வரும் பல செய்திகளும் அந்த நடிகையை சிறிது குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. இதில் என்ன முடிவெடுப்பது என்று குழம்பித் தவித்து வரும் நடிகை பற்றிதான் தற்போது திரையுலகில் பேச்சாக கிடக்கிறது.

- Advertisement -spot_img

Trending News