தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடமே உள்ளது. அதற்குள் சினிமாவில் பிரபலமானவர்களை இழுக்க மாடல் கட்சி தயாராகியுள்ளது. பல பேரிடம் பேசிக் கொண்டிருக்க தற்பொழுது சூப்பர் நடிகையிடம் பேச்சு வார்த்தைகள் நடக்கிறது.
சூப்பர் நடிகை அந்த கட்சியின் சின்னவருக்கு நெருக்கமானவர் என்பதால் ஓகே சொல்லவும் முடியாமல், இல்லை என்று சொல்ல முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்.
தற்பொழுது சூப்பர் நடிகைக்கு சொல்லும் படி பெரிய படங்கள் எதுமே இல்லை. தற்போது நடித்து கொண்டிருக்கும் இரண்டு, மூன்று படங்கள் தான்.
அதன் பிறகு வாய்ப்புகள் வருமா இல்லையா என்ற ஒரு சந்தேகம். அரசியலுக்கு சென்று பார்ப்போம் என்ற எண்ணம் தற்பொழுது சூப்பர் நடிகைக்கு வந்துள்ளது.
கூடிய விரைவில் தமிழ்நாட்டின் உயர்ந்தவரை சந்தித்து கட்சியில் இணையலாம்.