திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

படம் ஓடாததால் ஆ**றை விளம்பரத்தில் பிரபல நடிகை.. சர்ச்சையில் மாட்டிய சிம்பு பட நடிகை

பிரபலங்களை விளம்பரங்களில் நடிக்க வைத்து தங்களுடைய பொருள்களை மார்க்கெட் செய்வதை பெரும்பாலான நிறுவனங்கள் கையாளும் யுக்தி. சில காலமாக தமிழ் நடிகர்கள் இதனை தவிர்த்து வந்தாலும், மற்ற மொழிகளின் பெரிய பெரிய நடிகர்கள் இவ்வாறான விளம்பரங்களில் நடித்து வருகின்றனர். சில பிரபலங்கள் தங்களுடைய சமூக வலைத்தளங்களில் விளம்பரங்கள் செய்வதும் உண்டு.

தமிழில் சிம்புவின் ஈஸ்வரன் மற்றும் ஜெயம் ரவியின் பூமி படங்களின் மூலம் அறியப்பட்டவர் நாயகி நிதி அகர்வால். தெலுங்கிலும், ஹிந்தி மொழியில் சில படங்களில் நடித்துள்ளார் இவர். சினிமாவை தாண்டி இன்ஸ்டாகிராம் மூலம் நெட்டிசன்களுக்கு பெரிதும் பரீட்சயம்.

தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் சில நிறுவனங்களை விளம்பரம் செய்து பதிவுகளை வெளியிட்டு வந்துள்ளார். தற்போது இவர் அவ்வாறாக செய்துள்ள ஒரு விளம்பரம் பெரும் சர்ச்சையை கிளப்பியது.

ஒரு தனியார் நிறுவனத்தின் காண்டம் விளம்பரத்தை பகிர்ந்ததுடன் தனியாக அதனை விளம்பரப்படுத்தி போஸ்ட் ஒன்றையும் பதிவிட்டுள்ளார். தனியார் நிறுவனத்தின் பிரமோஷனுக்காக காசு வாங்கி அவர் இதனை செய்திருந்தாலும், பொது வெளியில் ஒரு நடிகை இவ்வாறு பதிவிட்டிறுப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

காண்டம் விளம்பரத்தில் நடித்த நிதி அகர்வாலை குறித்து நெட்டிசன்கள் கலவையாக பதிலளித்துள்ளனர். நீங்கள் இப்படி விளம்பரம் செய்வீர்கள் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை மேடம் என சிலரும், இது ஒரு துணிச்சலான விளம்பரம் என சிலர் பாராட்டியும் வருகின்றனர். மேலும் சிலர் கோச்சையாக பேசியும் பதிவிட்டு வருகின்றனர்.

ஏற்கனவே, மோர்ப்பியஸ் என்னும் பிராண்டி விளம்பரங்களை பகிர்ந்ததற்கு நிதி அகர்வால் பெரும் சர்ச்சைகளை எதிர்கொண்டார். இருப்பினும் அவர் மீண்டும் அவர் இவ்வாறான ஒரு சர்ச்சைக்குறிய விளம்பரத்தை பதிவிட்டுள்ளார். தமிழில் வாய்ப்புகள் இல்லாத இவர் தற்போது தெலுங்கில் நடிகர் பவன் கல்யாணுடன் ஹரிஹர வீர மல்லு படத்தில் நடித்து வருகிறார்.

Trending News