செவ்வாய்க்கிழமை, ஜனவரி 21, 2025

விபச்சார வழக்கில் சிக்கி மார்க்கெட் இழந்த நடிகை.. ஓரங்கட்டிய தமிழ் சினிமா

தமிழ் சினிமாவில் அழகான நடிகையாக பல திரைப்படங்களில் நடித்தவர் அந்த நடிகை. இவர் அறிமுகமான முதல் திரைப்படமே மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இரண்டு நாயகிகளில் ஒருவராக அறிமுகமான நடிகை அதன்பிறகு பல திரைப்படங்களில் சோலோ ஹீரோயினாக நடித்து வந்தார்.

நடிக்க வந்த சில வருடங்களிலேயே நடிகை தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்தார். அதிலும் அவர் ஒரு சில ஹிந்தி திரைப்படங்களில் நடித்து அதிக பிரபலமானார்.

நடிகை சினிமாவில் எவ்வளவு வேகமாக முன்னேறினாரோ அவ்வளவு சீக்கிரம் அவருடைய மார்க்கெட்டும் சரிந்தது. இதனால் நடிகை கிடைத்த கதாபாத்திரங்களில் எல்லாம் நடிக்க தொடங்கினார். அதிலும் காமெடி நடிகருக்கு ஜோடியாகவும், கவர்ச்சி கதாபாத்திரங்களிலும் நடித்து பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

அதன் பிறகு புது புது நடிகைகளின் வரவால் இவர் சினிமாவில் இருந்து முற்றிலுமாக ஓரம் கட்டப்பட்டார். இவரைப் பற்றிய எந்த தகவல்களும் யாருக்கும் தெரியாமல் இருந்த நிலையில் அனைவருக்கும் அதிர்ச்சியூட்டும் விதமாக நடிகை விபச்சார வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டார்.

இந்த செய்தியால் திரையுலகமே சிலகாலம் பரபரப்பாக இருந்தது. ஆனால் சம்பந்தப்பட்ட நடிகையோ போலீஸ் தன் மேல் வேண்டுமென்றே இப்படி ஒரு பொய் வழக்கு பதிவு செய்துள்ளதாக அறிவித்தார். ஒருவழியாக அந்த வழக்கில் இருந்து வெளிவந்த நடிகை பல வருடங்களுக்கு பிறகு ஒரு திரைப்படத்தில் நடித்தார்.

ஆனால் அந்தப் படமும் அவருக்கு கைகொடுக்கவில்லை. இதனால் நடிகை தற்போது எந்த படமும் இல்லாமல் சினிமாவை விட்டு ஒதுங்கி விட்டார். தற்போது அந்த நடிகை எங்கிருக்கிறார் என்ற தகவல் யாருக்கும் தெரியவில்லை. இப்படி ஒரு நடிகை இருந்ததையே தமிழ் சினிமா முற்றிலும் மறந்து விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

Trending News