தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து தற்போது முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் அந்த நடிகை. திருமணத்துக்குப் பிறகும் கூட நடிகைக்கு இருக்கும் மவுசு குறையாமல் அப்படியே தான் இருக்கிறது. இதுதவிர நடிகைக்கு ரசிகர்கள் கூட்டமும் ஏராளம் உண்டு.
நடிகை நடிக்க வந்த சில காலங்களிலேயே பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தார். அப்படி அவர் தமிழில் முன்னணி ஹீரோ ஒருவருக்கு ஜோடியாக சில படங்களில் நடித்திருக்கிறார். இதனால் நடிகருடன் நடிகைக்கு நல்ல நட்பும் இருக்கிறது.
இந்நிலையில்தான் நடிகை, நடிகருக்கு போன் போட்டு ஒரு கட்டளை போட்டிருக்கிறார். அதாவது அந்த முன்னணி நடிகர் தற்போது ஒரு புதிய படத்தில் மும்முரமாக நடித்து வருகிறார். அதில் நடிகருக்கு ஜோடியாக ஒரு இளம் நாயகி நடித்து வருகிறார்.
இதைக் கேள்விப்பட்ட நடிகை அந்த நடிகருக்கு போன் போட்டு அந்த இளம் நாயகியுடன் நடிக்க வேண்டாம் என்று கூறியிருக்கிறார். சில காலமாக சம்பந்தப்பட்ட அந்த இரண்டு நடிகைகளுக்கும் சண்டை இருக்கிறதாம்.
இதனால்தான் அந்த நடிகை ஹீரோவுக்கு போன் போட்டு இப்படி ஒரு விஷயத்தை கூறியிருக்கிறாராம். நடிகர் இந்த விஷயத்தில் நல்ல முடிவு எடுப்பார் என்று நினைத்த நடிகைக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஏனென்றால் நடிகரோ அதை கண்டுகொள்ளாமல் அப்படியே விட்டு விட்டாராம்.