பொதுவாக நம்ம ஊர் நடிகைகள் அனைவருக்குமே எப்படியாவது பாலிவுட் சென்று அங்கு பெரிய நடிகையாகி விடவேண்டும் என்ற கனவு இருக்கும். ஆனால் அந்த வாய்ப்பு எல்லா நடிகைகளுக்கும் கிடைத்துவிடாது. ஒரு சில நடிகைகள் மட்டுமே இந்தி திரையுலகில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளனர்.
அந்த வகையில் பிரபல நடிகை ஒருவர் தனக்கு கிடைத்த அந்த வாய்ப்பை வேண்டாம் என்று ஒதுக்கி தள்ளியுள்ளார். மலையாள திரையுலகில் மிகப் பெரிய ஹிட்டடித்த அந்த திரைப்படத்தில் டீச்சராக அறிமுகமானவர் தான் அந்த நடிகை. முதல் படமே அவருக்கு ஏராளமான ரசிகர்களை பெற்றுக் கொடுத்தது.
அதைத் தொடர்ந்து அவர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் பிஸியாக நடித்து வந்தார். இதனால் அவர் அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் மிகவும் பரிச்சயமான முகமாகவே இருக்கிறார். தற்போது அவர் தெலுங்கு திரையுலகில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் பிரபல நிறுவனம் ஒன்று நடிகையிடம் பாலிவுட்டில் நடிப்பதற்கு அழைப்பு விடுத்தது. அதுவும் இரண்டு படங்களில் நடிப்பதற்கு நடிகைக்கு வாய்ப்பு கிடைத்தது. இப்படி ஒரு வாய்ப்பு யாருக்கும் அவ்வளவு எளிதில் கிடைத்துவிடாது. ஆனால் நடிகை கொஞ்சம் கூட யோசிக்காமல் இந்த வாய்ப்பை வேண்டாம் என்று மறுத்துள்ளார்.
பாலிவுட் என்றாலே பலான காட்சிகள் நடித்தே ஆகவேண்டும் இதனால் தான் இந்த வாய்ப்பை வேண்டாம் என்று ஒதுக்கி விட்டாராம். இயல்பாகவே நடிகை கொஞ்சம் வித்யாசமான ஆள் தான். பணம் கிடைக்கிறதே என்று அனைத்து வாய்ப்புகளையும் அவர் ஏற்றுக் கொள்ள மாட்டார்.
அவருக்கு முக்கியத்துவம் இருந்தால் மட்டுமே படத்தில் நடிக்க சம்மதிப்பார். அதனால்தான் அவர் இந்த வாய்ப்பை நிராகரித்து விட்டாராம். தற்போது பாலிவுட் கனவுடன் இருக்கும் சக நடிகைகள் இந்த செய்தியை கேள்விப்பட்டு ஆச்சரியத்தில் இருக்கின்றனர்.