வியாழக்கிழமை, அக்டோபர் 31, 2024

அந்த மன்மதனை ஜோடியா போடுங்க.. சூழ்நிலை தெரியாமல் அடம்பிடிக்கும் பிரபல நடிகை

சினிமாவில் பிரபல கதாநாயகியாக இருக்கும் அந்த நடிகை தனக்குப் பிடித்த ஒருவருடன் ஜோடி போட்டு நடிப்பதற்கு சிபாரிசு செய்யும் செய்தி தற்போது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

சினிமாவில் மற்ற ஹீரோக்களே பொறாமைப்படும் அளவிற்கு ஹேண்ட்சம் ஹீரோவாக இருப்பவர் அந்த பிரபல நடிகர். அவர் சினிமாவுக்கு நடிக்க வந்த புதிதில் அவருடைய அழகான தோற்றமும், வசீகரமும் பிரபல கதாநாயகிகள் அனைவரையும் கவர்ந்து இழுக்குமாம்.

பல படங்களில் ஹீரோவாக நடித்து அனைவரையும் கவர்ந்த அவர் சில காலங்கள் நடிப்புக்கு பிரேக் விட்டார். தற்போது மீண்டும் புதுப்பொலிவுடன் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி இருக்கும் நடிகர் சினிமாவில் வில்லன் அவதாரம் எடுத்துள்ளார்.

இருந்தாலும் அவர் இன்னமும் பிரபல கதாநாயகிகளின் கனவு நாயகனாக இருந்து வருகிறார். அவருடன் ஒரு படத்திலாவது சேர்ந்து நடித்து விட வேண்டும் என்று பல நாயகிகளும் ஆசைப்படுகின்றனர்.

இந்நிலையில் பிரபல ஹீரோயின் ஒருவர் அந்த நடிகருடன் இணைந்து நடிக்க ஆசைப்பட்டு அவரை சிபாரிசு செய்துள்ளார். நடிகை தற்போது ஒரு புதிய படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகியுள்ளார். அந்தப் படத்தில் தனக்கு ஜோடியாக நடிக்க அந்த பிரபல நடிகரை ஒப்பந்தம் செய்வதற்கு டைரக்டரிடம் சிபாரிசு செய்துள்ளாராம் அந்த நடிகை.

நடிகருக்கு இப்படி ஒரு மார்க்கெட் இருக்கிறதா என்றும், நடிகையின் ரசனையை தெரிந்தும் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டாராம் கதை சொல்ல வந்த அந்த இயக்குனர்.

- Advertisement -spot_img

Trending News