செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

சரத்குமாரை திட்டிய ஹீரோயின்.. பல வருடங்கள் கழித்து பதிலடி கொடுத்த தரமான சம்பவம்

தனது கட்டுமஸ்தான உடம்பால் பல பெண் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் சரத்குமார். இவர் சென்னையில் ஆணழகன் போட்டியில் கலந்துகொண்டு வென்ற பின்பு இவருக்கு சினிமாவில் நடிக்க பல பட வாய்ப்புகள் வந்துள்ளது. ஆனால் அவருடைய தந்தை படிப்பில் கவனம் செலுத்த சொன்னதால் படித்து முடித்துவிட்டு சினிமா புரொடக்ஷன் மேனேஜராக வேலை செய்து கொண்டிருந்தார்.

எனது நண்பரின் தெலுங்கு படத்தில் சரத்குமார் வேலை செய்து கொண்டிருந்தார். அந்தப் படத்தில் அன்று வரவேண்டிய ஆர்டிஸ்ட் வராததால் அந்தக் கதாபாத்திரத்தில் சரத்குமாரை நடிக்க வைக்கிறார்கள். அப்போது அவருக்கு தெலுங்கு வராததால் சற்று தயக்கத்துடன் தான் படத்தில் நடிக்க ஒத்துக் கொண்டார்.

அந்தப் படத்தில் விஜய் சாந்தி ஹீரோயினாக நடித்திருந்தார். அப்போதைய காலகட்டத்தில் படு பிசியாக இருந்த ஹீரோயின்களில் விஜயசாந்தியும் ஒருவர். அப்போது விஜயசாந்தி இந்த படத்தின் சூட்டிங்கை முடித்து விட்டு வேறு ஒரு படத்தின் ஷூட்டிங்குக்காக சென்னை செல்ல வேண்டி இருந்தது.

சரத்குமார், விஜய் சாந்தி இருவருக்கும் ஒரு ஷாட் வைக்கப்படுகிறது. சரத்குமாருக்கு தெலுங்கு தெரியாததால் அந்த ஷாட் பலமுறை எடுக்கப்பட்டது. இதனால் கோபம் அடைந்த விஜயசாந்தி வேற ஆள் இல்லையா சார், இவர போய் நடிக்க வைக்கிறீர்கள் எனக்குப் ஃபிளைடுக்கு வேற டைம் ஆச்சு என்ன கத்தி விட்டாராம்.

இதனால் சரத்குமார் மிகுந்த மன கஷ்டத்தில் இருந்துள்ளார். அதன் பிறகு நிறைய பட வாய்ப்புகள் கிடைக்க சரத்குமார் என்றால் எல்லோரும் அறியும்படி மாறுகிறார். அப்போது நீண்ட வருடம் கழித்து விஜயசாந்தி உடன் ராஜஸ்தான் படத்தில் மீண்டும் நடிக்கும் வாய்ப்பு சரத்குமாருக்கு கிடைக்கிறது. அப்போது விஜயகாந்திடம் சரத்குமார் நீங்கள் என்னை திட்டி இருக்கீங்க ஞாபகம் இருக்கா என கேட்டுள்ளார்.

அதற்கு விஜயசாந்தி நான் உங்கள பார்த்ததே இல்ல சார் எப்படி திட்டி இருப்பேன் என கேட்டுள்ளார். இப்போது அந்த தெலுங்கு படத்தின் பெயரை சொல்லி இதில் நடிக்கும் போதுதான் திட்டினார்கள் என சரத்குமாருக்கு சொல்லியுள்ளார். அதற்கு உடனே விஜய்சாந்தி சாரி எனக் கூறியுள்ளார். இப்ப சாரி சொல்லி என்ன ப்ரயோஜனம் அப்பவே சொல்லி இருக்கணும் என சரத்குமார் விளையாட்டாக கூறியள்ளார். ஒரு சில காட்சிகள் அதிகமுறை ரீடேக் எடுக்கப்பட்டதால் சரத்குமார் அந்த சமயத்தில் கோபப்பட்டு உள்ளார், இப்படியும் காலம் மாறி உள்ளது ஆச்சரியம்தான்.

Trending News