வியாழக்கிழமை, அக்டோபர் 31, 2024

ஷூட்டிங் ஸ்பாட்டில் அருவருப்பாக நடிக்க சொல்றாங்க.. சின்னத்திரைக்கு தஞ்சம் அடைந்த நடிகை

சின்னத்திரையில் ஒரு சில சீரியல்களில் நடித்து பிரபலமான அந்த நடிகை சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு வெள்ளித்திரை பக்கம் போனார். அங்கு ஹீரோயின் கேரக்டர் இல்லாவிட்டாலும் கண்ணியமான கதாபாத்திரங்கள் கிடைக்கும் என்று நினைத்த நடிகைக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

ஏனென்றால் நடிகைக்கு கிடைத்தது என்னவோ அருவருப்பாக, மோசமான கதாபாத்திரங்களும், படுக்கையறை காட்சிகளும் தான். மேலும் நடிகை கவர்ச்சியான உடல்வாகுடன் இருப்பதால் அவருக்கு கிடைக்கும் கேரக்டர்களும் அந்த மாதிரியான கதையம்சம் கொண்டதாகவே அமைந்து விடுகிறது.

இதனால் நடிகை கௌரவமான கதாபாத்திரங்கள் என்றால் கூட பரவாயில்லை ஆனால் எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது என்று தன்னுடைய நெருக்கமான தோழிகளிடம் சொல்லி புலம்பி இருக்கிறார். இப்படிப்பட்ட கதாபாத்திரங்களில் நடிப்பதால் படப்பிடிப்பு தளத்தில் கூட தன்னை ஒரு மாதிரியாக எல்லோரும் பார்க்கிறார்கள் என்று நொந்து போயிருக்கிறார் அந்த நடிகை.

இதனால் நடிகை தற்போது அதிக படங்களை கமிட் செய்யாமல் பெரிய படங்களுக்கு மட்டும் ஓகே சொல்லும் முடிவில் இருக்கிறார். மேலும் எப்போதாவதுதான் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாகவும் அதனால்தான் அந்த மாதிரி கேரக்டர்களையும் ஒப்புக் கொண்டு நடித்து வருவதாகவும் நடிகை புலம்பி வருகிறார்.

சினிமாவில் தன்னுடைய பெயர் ரொம்ப டேமேஜ் ஆன நிலையில் நடிகை தற்போது சின்னத்திரை பக்கமே வந்துவிட்டார். இங்கு நடிகைக்கு வில்லி, குணசித்திரம் என்று பல கேரக்டர்கள் கிடைப்பதால் அதை மன நிறைவுடன் செய்து வருகிறார்.

நடிகை இப்படி மனக் கஷ்டத்துடன் கூறியது தற்போது திரையுலகில் சின்ன அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. எவ்வளவு திறமை இருந்தாலும், கவர்ச்சி காட்டினாலும் அதிர்ஷ்டமும் இருந்தால் மட்டுமே சினிமா துறையில் ஜெயிக்க முடியும்.

- Advertisement -spot_img

Trending News