ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 29, 2024

நண்பர்களை மதிக்காத நாகேஷ்.. எல்லாம் பார்த்தாச்சு என விடாப்பிடியாய் வீழ்ந்த சோகம்

திரையில் பல சாதனைகளையும் நடிப்பில் பல உயரங்களையும் அடைந்த பல நடிகர்கள் தங்களுடைய சொந்த வாழ்க்கையில் செய்த தவறினால் ஒட்டுமொத்த புகழையும் வீணாக்கி விட்டு இறுதியில் அவர்களின் அந்த கெட்ட பழக்கத்திற்கு அடிமையாகி அடங்கி ஒடுங்கி விடுகின்றனர். அப்படி ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்த நாகேஷ் என்ற ஒரு நடிகரை பற்றி பேசாமல் இந்த நூறு ஆண்டுகால சினிமா நிறைவு பெறாது. அப்படிப்பட்ட நடிகராக வலம் வந்தவர் நாகேஷ் அவர்கள்.

ஒரு வருடத்தில் 6 படங்கள் ரிலீஸ் ஆனாலும் அந்த 6 படத்திலும் நாகேஷின் பங்கு இருக்கும். அப்படி மிகச்சிறந்த கைதேர்ந்த பல நடிகர்களோடு ஒரே நேரத்தில் நடித்த அனுபவம் நாகேஷ் அவர்களுக்கு இருக்கிறது. காலங்கள் தாண்டி எம்ஜிஆர்,சிவாஜி, ரஜினி, கமல், அஜித், சூர்யா ,விக்ரம் ,விஜய் என அனைத்து நடிகர்களுடனும் நடித்த பெருமை இவருக்கு உண்டு. காலங்கள் கடந்தாலும் அதே துடிப்போடு இவர் நடிக்கும் மிரட்டல் நடிப்பு பார்ப்போரை உண்மையில் மிரளச் செய்யும்.

இப்படிப்பட்ட ஒரு நடிப்பு அரக்கனை குடிப்பழக்கம் கெடுத்து வீணாகிவிட்டது என்று சொன்னால் நம்ப முடிகிறதா..? ஒரு நாளின் 24 மணி நேரத்தில் 16 மணி நேரத்திற்கும் மேலாக சினிமாவிற்காக ஓடி ஓடி உழைத்து புகழ் சேர்த்த நாகேஷ் அவர்கள் ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பு முடிந்த பிறகு வீட்டில் வந்து மது அருந்தி விட்டு தான் உறங்கச் செல்வார். தினமும் இப்படி மது அருந்துவதால் அவருக்கு உடல்நலம் வெகு விரைவிலேயே பாதிக்கப்பட்டது.

இதனால் அவரின் உற்ற நண்பர்களான மேஜர் சுந்தர்ராஜன், ஜெய்சங்கர் ஆகிய இருவரும் பல முறை அவருக்கு அறிவுரை கூறியிருக்கின்றனர். சினிமாவில் நடித்து புகழ் அடைந்தால் மட்டும் பத்தாது ஒரு நல்ல மனிதனாக வாழ்ந்தால் மட்டுமே அந்த புகழை உன்னால் அனுபவிக்க முடியும் என்று அவர்கள் எத்தனையோ முறை நாகேஷ்டம் கூறியிருக்கின்றனர்

சுந்தரராஜனும், நாகேஷும் நாடக கம்பெனியில் வேலை பார்த்தபோது உயிர் நண்பர்களாக இருந்தவர்கள்; அந்த உரிமையில் மேஜர் சுந்தரராஜன் மிகக் கடுமையான வார்த்தைகளால் கூட நாகேஷிடம் அறிவுரை கூறி இருக்கிறாராம். ஆனால் செவிமடுக்காத நாகேஷ் ஷூட்டிங் முடிந்து வந்தவுடன் மது குடித்து விட்டு ஜாலியாக தனது வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தார்.

கை நீட்டும் தூரத்தில் அனைத்து வசதிகளும் இருக்கும் பட்சத்தில் அவரால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு குடித்து அவரது வாழ்நாளின் நாட்களை குறைத்துக் கொண்டே வந்தார். ஒவ்வொரு முறையும் ஜெய்சங்கரும், மேஜர் சுந்தர்ராஜன் என இருவரும் குடிக்காதே இதனால் உடலுக்கு கேடு ஏற்படும் நீ சீக்கிரம் இறந்து விடுவாய் என்று அறிவுரை கூறி உள்ளனர். அதைக் கேட்காமல் கடைசிவரை ஜாலியாக இருந்து விட்டு ஒருநாள் போய்விடலாம் என்று கூறுவாராம் நாகேஷ்.

அப்போதெல்லாம் அடப்போடா நான் ஜாலிமேன் இந்த வாழ்க்கையை ஜாலியாக வாழ பிறந்தவன் என்று கூறி, தொடர்ந்து குடித்து குடித்து இறுதியில் அந்த குடியால் அவரின் வாழ்க்கையை தொலைத்து விட்டார் இன்றுவரை நாகேஷிடம் நெருங்கி பழகியவர்கள் பலரிடம் கேட்கும்போது பழகுவதற்கு மிகவும் நல்லவர் அனைவருக்கும் பிடித்தமான ஒரு கேரக்டர் ஆனால் அந்த குடிப்பழக்கம் தான் என்று அதை மட்டும் குறிவைத்து குறை சொல்வார்கள்.

Trending News