திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

இன்று வரை நிஜ வாழ்விலும் ஆட்சி செய்த 10 காமெடி வசனங்கள்.. வேற லெவலில் கலக்கிய நேசமணி

சினிமாவில் ஒரு சில காமெடி காட்சிகளை பார்த்தால் நம்மால் சிரிப்பை அடக்கவே முடியாது. அதிலும் அவர்கள் எதார்த்தமாக கூறிய வசனங்கள் ஒரு டிரெண்டாக மாறிய சம்பவங்களும் உண்டு. அப்படி நம் நிஜ வாழ்விலும் ஆட்சி செய்த 10 காமெடி வசனங்களை பற்றி காண்போம்.

பெட்ரோமாஸ் லைட்டே தான் வேணுமா கவுண்டமணி, செந்தில் நடிப்பில் வந்த மிகவும் பிரபலமான காமெடி வசனம் இது. இதை வைத்து ஒரு பாட்டு கூட இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இந்தப் படம் வந்த போது இந்த வசனம் பெரிதாக ரசிக்காமல் இருந்தாலும் இப்போது சக்கைபோடு போட்டு வருகிறது.

ஆணியே புடுங்க வேண்டாம் பிரண்ட்ஸ் படத்தில் வடிவேலு ரொம்பவும் டென்ஷனாக பேசும் வசனம் இது ஆனால் பார்க்கும் நமக்கு மிகவும் காமெடியாக இருக்கும். தற்போது இந்த வசனம் பயங்கர ட்ரெண்டாக மாறியுள்ளது.

என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா ஒரு நிகழ்ச்சியில் லட்சுமி ராமகிருஷ்ணன் ரொம்பவும் நொந்து போய் பேசிய டயலாக் இது. அதன் பிறகு இந்த வசனம் பலராலும் கலாய்க்கப்பட்டது. இதனால் ஒரு முறை லட்சுமி ராமகிருஷ்ணன் ரொம்பவும் டென்ஷனாகி பேசியது குறிப்பிடத்தக்கது.

வட போச்சே போக்கிரி படத்தில் பாடி சோடாவாக வரும் வடிவேலு இந்த டயலாக்கை பேசுவார். அதன் பிறகு இந்த டயலாக் அனைவரும் விரும்பும் ஒரு வசனம் ஆக மாறியது.

குமுதா ஹேப்பி அண்ணாச்சி இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற திரைப்படத்தில் விஜய் சேதுபதி இந்த டயலாக்கை அடிக்கடி சொல்லுவார். அதிலிருந்து அந்தப் பட ஹீரோயின் நந்திதாவை யார் எப்போது பார்த்தாலும் குமுதா என்று அழைப்பது வழக்கமாகி வருகிறது.

பில்டிங் ஸ்ட்ராங்கு பேஸ்மெண்ட் வீக் வடிவேலு ஒரு திரைப்படத்தில் போலீஸாக இருக்கும் பிரகாஷ் ராஜை பார்த்து விறைப்பாக நிற்பார். அதற்கு மாறாக அவருடைய கால்கள் கடகடவென்று ஆடிக்கொண்டிருக்கும். அப்போது வடிவேலு இந்த டயலாக்கை கூறுவார். மக்கள் மிகவும் ரசித்த வசனங்களில் இதுவும் ஒன்று.

மாப்பு வச்சுட்டான்யா ஆப்பு சந்திரமுகி திரைப்படத்தில் வடிவேலுவை அந்த பேய் பங்களாவில் ரஜினி விட்டு விட்டு தப்பித்து விடுவார். அப்போது பயத்தில் வடிவேலு சொல்லும் வசனம் இது. இந்த படம் வெளிவந்த பிறகு சிறு குழந்தைகள் கூட இந்த வசனத்தை சொல்லி ரசித்தது.

எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் விவேக் ஒரு திரைப்படத்தில் மனோபாலா உடன் இணைந்து இந்த டயலாக்கை பல மாடுலேஷனில் பேசுவார். தற்போது பிரபலமாக இருக்கும் வசனங்களில் இதுவும் ஒன்று.

வரும் ஆனா வராது வடிவேலு ஒரு திரைப்படத்தில் டிரைவரிடம் கார் வருமா என்று கேட்பார். அதற்கு அவர் வரும் ஆனா வராது என்று இந்த வசனத்தை கூறுவார். இந்த வசனமும் தற்போது பிரபலமாக இருக்கிறது.

என்ன சின்னப்புள்ளத்தனமா இருக்குது வடிவேலு பேசும் வசனங்களில் மிகவும் பிரபலமான வசனம் இதுதான். நாம் அன்றாடம் பேசும் போது இந்த வசனம் நம்முடன் இயல்பாக கலந்துவிட்டது.

Trending News