வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

விஜய் ஆண்டனி உடன் இணையும் பிரபல இயக்குனர்.. புதிய திட்டம் போடும் கூட்டணி

விஜய் ஆண்டனி தற்போது பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அக்னி சிறகுகள், காக்கி, மலை பிடிக்காத மனிதன், கொலை, பிச்சைக்காரன் 2, ரத்தம் என ஆகிய பல இடங்களில் ஒரு சில படங்கள் இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் பிச்சைக்காரன் 2 படத்தை விரைவில் திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் விஜய் ஆண்டனியை வைத்த பிரபல இயக்குனர் சுசீந்திரன் ஒரு படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார். அதுவும் இப்படம் பான் இந்தியத் திரைப்படமாக எடுக்கப்பட உள்ளது. சமீபமாக தமிழில் உருவாகும் பல படங்கள் பான் இந்திய படமாக உருவாகிறது. இதனால் ஹீரோக்கள் பல மொழி ரசிகர்களையும் கவர முடிகிறது.

இந்நிலையில் முதல்முறையாக சுசீந்திரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி பான் இந்திய படத்தில் நடிக்கவுள்ளார். ஆரம்பத்தில் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான வெண்ணிலா கபடிக்குழு, நான் மகான் அல்ல, பாண்டியநாடு போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது.

ஆனால் சமீபகாலமாக அவர் இயக்கத்தில் வெளியாகும் படங்கள் ரசிகர்களை பெரிதும் கவரவில்லை. தொடர்ந்து தோல்விப் படங்களைக் கொடுத்து வருகிறார். இதனால் எந்த நடிகரும் இவருக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. இந்நிலையில் விஜய் ஆண்டனி சுசீந்திரனுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார்.

முதல் முறையாக இணையும் இந்த கூட்டணி எந்த அளவுக்கு வெற்றி பெறும் என்பது கேள்விக்குறிதான். ஆனால் இப்படம் காடுகளை கருவாகக் கொண்டு எடுக்கப்பட உள்ளது. இதனால் தற்போது சுசீந்திரன் காடுகளுக்கு சென்று இப்படத்தின் கதையை எழுதி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் கூடிய விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகும். இந்நிலையில் படு பிசியாக இருக்கும் விஜய் ஆண்டனியின் அடுத்தடுத்த படங்கள் தொடர்ந்து ரிலீசாகி அவரது ரசிகர்களை மகிழ்விக்க காத்திருக்கிறது.

Trending News