வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

பிரசன்னாவின் முன் சினேகாவை அசிங்கமாக வர்ணித்த இயக்குனர்.. புதுமண தம்பதிக்கு ஏற்பட்ட அவமானம்

தமிழ் சினிமாவில் புன்னகை இளவரசி என்று அழைக்கப்படும் சினேகா பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் கூட்டம் உண்டு. ஆரம்பத்தில் சினேகா பல நடிகர்களுடன் சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஆனால் தன்னுடைய முழு திறமையால் ஒரு நிலையான நடிகையாக மாறினார்.

ஆரம்பத்தில் சினிமா வாய்ப்புக்காக பல நடிகைகள் அட்ஜஸ்ட்மெண்ட் செய்துதான் சினிமா துறையில் நுழைந்து உள்ளார்கள். ஒரு சில நடிகைகள் ஆரம்பத்தில் அதற்கு ஒத்துக்கொண்டு விட்டு பின்பு பல இயக்குனர்கள் எங்களை படுக்கை அறைக்கு அழைத்தனர் என பேட்டிகளில் கூறுவார்கள்.

இந்த மாதிரி முதலில் அட்ஜஸ்ட்மெண்ட் ஒத்துக்கொண்டு பல ஆண்டுகளுக்குப் பிறகு எங்களை ஏமாற்றியதாக பல நடிகைகள் கூறியது அனைவருக்கும் தெரிந்தது. சமீபகாலமாக நடிகைகளுக்கு தங்களுக்கு நடந்த அட்ஜஸ்ட்மெண்ட்களை வெளிப்படையாக சொல்லிவிடுகின்றன.

ஆனால் சொல்லப்போனால் முதல் குற்றவாளியே நடிகைகள்தான். நடிகைகளை தவறாக அழைப்பவர்களை தயக்கமில்லாமல் அப்பொழுதே களை எடுத்திருக்க வேண்டும். ஆனால் வாய்ப்பிற்காக முதலில் ஒப்புக் கொண்டுவிட்டு சினிமாவில் நிரந்தர இடத்தை பிடித்த பிறகு சில ஆண்டுகள் கழித்து ஏமாற்றியதாக கூறுகின்றனர்.

பிரசன்னா, சினேகாவின் திருமணம் செய்த புதிதில் ஒரு விழாவிற்கு சென்றுள்ளனர். அப்போது பிதாமகன் என்று நினைக்கக்கூடிய இயக்குனர் ஒருவர் அந்த நிகழ்ச்சி மேடையில் பேசும்போது எனக்கு ஊட்டி மலை ரொம்ப பிடிக்கும், அதன் வளைவு நெளிவு அழகாக இருக்கும் என கூறிவிட்டு சினேகாவை பார்த்துள்ளார்.

அதுவும் சினேகாவின் கணவர், பிரசன்னா முன்பு அவர் இப்படி பேசியது அனைவருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. பிரசன்னாவும் சினிமாதுறையை சேர்ந்தவர் என்பதால் இதுபற்றி அவர் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. பின்பு சினேகாவும், பிரசன்னாவும் அதை பெரும் பொருட்டாக எடுத்துக்கொள்ளாமல் நிகழ்ச்சியை முடித்துவிட்டு சென்றுள்ளனர். இதனை பிரபல பத்திரிக்கையாளர் ஒருவர் வெளிப்படையாக சமீபத்தில் கூறியுள்ளார் .

Trending News