ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

ஹீரோ நானா, இல்ல அவனா.. வடிவேலுவை பார்த்து சண்டைக்குப் போனே நடிகர்

ஒரு நகைச்சுவை நடிகராக தமிழ் திரையுலகில் கலக்கி வரும் நடிகர் வடிவேலு தற்போது ஒரு ஹீரோவாகவும் உயர்ந்திருக்கிறார். இவர் ஆரம்ப காலகட்டத்தில் சிறு சிறு காமெடி வேடங்களில் நடித்துக்கொண்டிருந்தார். அதன்பிறகு தான் அவர் நடிகர்களுக்கு இணையான காமெடி வேடங்களிலும் நடிக்க ஆரம்பித்தார்.

அதுமட்டுமல்லாமல் நடிகர் வடிவேலு சிறந்த குரல் வளம் உடையவர். அருமையான பாட்டுக்களை தன்னுடைய குரலில் பாடி அசத்த கூடியவர். அப்படி அவர் சினிமாவில் எட்டணா இருந்தா, யானை யானை, போடா போடா புண்ணாக்கு போன்ற பல பாடல்களை பாடியிருக்கிறார்.

இவர் பாடிய பாடல்கள் அனைத்தும் காமெடி கலந்து நம்மை ரசிக்க வைப்பவையாக இருக்கும். அப்படி நாம் அனைவரும் ரசித்த ஒரு பாடல்தான் வாடி பொட்ட புள்ள வெளியே பாடல். காலம் மாறி போச்சு என்ற திரைப்படத்தில் பாண்டியராஜன், சுந்தர்ராஜன் ஆகியோருடன் இணைந்து வடிவேலுவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தேவா இசையமைத்த அந்த திரைப்படத்தில் தான் வடிவேலு இப்படி ஒரு பாடலை பாடியிருப்பார். பாடுவதோடு மட்டுமில்லாமல் அந்த பாட்டுக்கு அவர் நடனமும் ஆடி கலக்கியிருப்பார். இந்த பாடலை அவரின் ரசிகர்கள் மிகவும் ரசித்தனர். ஆனால் ஒருவருக்கு மட்டும் மட்டும் வடிவேலு அந்த படத்தில் ஆடி பாடியது பிடிக்காமல் இருந்திருக்கிறது.

அவர் வேறு யாருமல்ல அந்த படத்தின் ஹீரோ பாண்டியராஜன் தான். அவருக்கு இயக்குனர் தனியாக ஒரு பாட்டு வடிவேலுவுக்கு வைத்திருந்தது பிடிக்கவில்லை. இதனால் அவர் இயக்குனர் வி சேகரிடம் சென்று என்னை படத்தில் ஹீரோவாய் போட்டுவிட்டு வடிவேலுவுக்கு மட்டும் தனி பாட்டா என்று கோபமாக பேசியிருக்கிறார்.

அதற்கு இயக்குனர் பாண்டியராஜனுக்கு சில சமாதானங்களை கூறி அனுப்பி வைத்திருக்கிறார். அதன் பிறகு படம் வெளிவந்து அனைவரையும் கவர்ந்து நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமல்லாமல் இந்தப் படத்தில் நடித்ததற்காக நடிகர் வடிவேலுவுக்கு சிறந்த காமெடியனுக்கான தமிழக அரசின் விருதும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

Trending News