புதன்கிழமை, ஜனவரி 15, 2025

மாமன்னன் ரத்னவேலை ஹீரோவாக்கும் பிரபல வில்லன்.. இயக்குனர் அவதாரம் எடுக்கும் நடிகர்

Fahadh Faasil: மலையாள நடிகர் பகத் பாஸில் இப்போது தமிழ் சினிமாவில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். அதுவும் அவரது கதாபாத்திரம் மிகவும் வேறுபட்டு காணப்படுகிறது. அதாவது புத்திசாலியான வில்லன் கதாபாத்திரம் அவருக்கு பக்காவாக பொருந்துவதால் இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் அடுத்தடுத்து பகத் பாசிலை தனது படங்களில் கமிட் செய்து வருகிறார்கள்.

அந்த வகையில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் வெளியான மாமன்னன் படத்தில் ரத்னவேல் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் ஹீரோ உதயநிதி மற்றும் மாமன்னனாக நடித்த வடிவேலு ஆகியோரை காட்டிலும் பகத் பாசில் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்டார்.

இவருக்கு அடுத்தடுத்து வில்லன் கதாபாத்திரம் கிடைத்துவரும் நிலையில் பிரபல நடிகர் ஒருவர் பகத் பாசிலை ஹீரோவாக தமிழ் ரசிகர்களுக்கு காட்ட வேண்டும் என்ற முயற்சியில் இறங்கி இருக்கிறார். அதாவது பகத் பாசிலை போலவே ஸ்டைலிஷ் வில்லனாக நடித்து ரசிகர்கள் இடையே கவனம் பெற்றவர் தான் அரவிந்த்சாமி.

சமீபகாலமாக இவர் தன்னை தேடி வரும் இயக்குனர்களுக்கு கால்ஷீட் கொடுக்க மறுப்பு தெரிவித்து வருகிறார். இதனால் அரவிந்த்சாமி தன்னுடைய தொழிலில் கவனம் செலுத்தி வருகிறார் என்றும் சினிமாவுக்கு எண்டு கார்ட் போட்டு விட்டார் என்று பேசப்பட்டு வந்தது. ஆனால் இப்போதுதான் அவர் சினிமாவை விடவில்லை என்பது தெரிய வந்துள்ளது.

அதாவது ரகசியமாக பகத் பாசிலை சந்தித்து பேசி இருக்கிறார். மேலும் ஒரு நல்ல ஹீரோ கதையை தயார் செய்து அவரிடம் அரவிந்த்சாமி கூறியிருக்கிறார். இந்த கதை பகத் பாசிலுக்கு பிடித்து விட்டதால் படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்து விட்டாராம். மேலும் இதற்கான வேலையில் தான் இப்போது அரவிந்த்சாமி இறங்கி இருக்கிறாராம்.

அதுவும் காது காதும் வைத்தார் போல் மிக ரகசியமாக இந்த படத்திற்கான வேலைகள் நடந்து வருகிறது. இந்த படத்தின் மூலம் அரவிந்த்சாமி இயக்குனர் அவதாரம் எடுக்கும் நிலையில் படம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதோடு மட்டுமல்லாமல் இந்த படத்தில் மற்ற பிரபலங்கள் யார் நடிக்கிறார்கள் என்ற விவரங்களுடன் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்பு இருக்கிறது.

Trending News