ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

சொகுசு விடுதியில் நடந்த நைட் பார்ட்டி.. பெரும்புள்ளியால் சிக்கலில் மாட்டிய நடிகை

Gossip: சினிமா பிரபலங்களை பொருத்தவரையில் நைட் பார்ட்டி என்பது சாதாரணமான விஷயம். இதற்கு பெரிதாக காரணம் ஒன்றும் தேவையில்லை. போர் அடித்தால் நண்பர்கள் கூட்டத்தை கூப்பிட்டு டான்ஸ் ட்ரிங்க்ஸ் என கொண்டாடி தீர்த்து விடுவார்கள்.

அப்படித்தான் மலையாள கரையோரத்தில் பிரபலமாக இருக்கும் நடிகை ஒரு முக்கிய பார்ட்டியில் கலந்து கொண்டிருக்கிறார் பெரும் புள்ளி நடத்திய அந்த பார்ட்டியில் தடை செய்யப்பட்ட பொருட்கள் தாராளமாக புலங்கி இருக்கிறது.

நடிகையுடன் சேர்த்து சமீபத்தில் தமிழ்நாட்டில் ஹிட்டான படத்தில் நடித்த நடிகர் உட்பட சில பிரபலங்கள் இருந்திருக்கின்றனர் எல்லோரும் பார்ட்டியை நன்றாக என்ஜாய் செய்த நேரத்தில் காவல் துறையின் காதுக்கு இந்த விஷயம் சென்றிருக்கிறது.

பெரும்புள்ளி வைத்த நைட் பார்ட்டி

தடை செய்யப்பட்ட பொருள் அங்கு எப்படி வந்தது என விசாரித்து சிலரை அவர்கள் கைது செய்திருக்கின்றனர். அது மட்டும் இன்றி சம்பந்தப்பட்ட நடிகையும் கூட இந்த விசாரணை வளையத்தில் சிக்கியிருக்கிறார்.

இதுதான் தற்போது அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால் நடிகையின் தரப்பிலோ அந்தப் பெரும் புள்ளி யார் என்று தெரியாது என கூறியிருக்கின்றனர். அதேபோல் சொகுசு விடுதியில் தங்கியதற்கும் சில காரணங்களை சொல்லி இருக்கின்றனர்.

இருந்தாலும் இந்த விவகாரம் அவ்வளவு எளிதில் முடியும் என்று தெரியவில்லை. இதனால் பதட்டத்தில் இருக்கும் நடிகை எப்படி இதிலிருந்து வெளிவரலாம் என தீவிர ஆலோசனையில் இருக்கிறாராம்.

Trending News