செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

ஏமாந்துபோன பிக் பாஸ் ஜூலி.. மேடையில் கண்ணீர் விட்டு கதறல்

பிக் பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்ட ஜூலி, பல கலவையான விமர்சனங்களுக்கு நடுவே இப்போது படம், சீரியல், விளம்பரம் என படு பிசியாக இருக்கிறார். சொந்த யூடியூப் சேனலையும் வைத்து நடத்துகிறார். இப்போது ஜூலி சமீபத்தில் பிரபல நிறுவனத்திடம் தான் ஏமாந்த கதையை ஒரு நிகழ்ச்சி மேடையில் பகிர்ந்து இருக்கிறார். ஜூலி என அனைவராலும் அறியப்படும் மரியா ஜூலியானா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பே, ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போதே தமிழ் மக்களிடையே பேமஸ் ஆகி இருந்தார். சொல்லப்போனால் இதன் மூலம் தான் அவருக்கு பிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது என்றே சொல்லலாம். இவர் நர்ஸாக இருந்தவர்.

Also Read : ஒன்னுக்கு 3 பேரை காதலித்த ஜூலி.. என்னடா இது, வீரத்தமிழச்சிக்கு வந்த சோதனை!

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய ஜூலி , லண்டனில் நர்ஸ் வேலை பார்ப்பதற்காக மும்பையை சேர்ந்த ஒரு நிறுவனத்திடம் 3 லட்சம் கொடுத்ததாகவும், ஆனால் அந்த நிறுவனம் வேலை வாங்கி தராமல் ஏமாற்றி விட்டதாகவும் பகிர்ந்து இருக்கிறார்.

தமிழ் மக்களிடையே வீரதமிழச்சி என்று பேர் எடுத்த ஜூலியின் வாழ்க்கை பிக்பாஸ்க்கு பிறகு தலை கீழாகவே மாறிவிட்டது. அந்த சீசனில் சினிமாவை பற்றி புரிதலே இல்லாமல் வந்த கண்டஸ்டண்ட் இவர் தான். இதனாலேயே என்னவோ இந்த நிகழ்ச்சியில் பயங்கர நெகடிவ் கமெண்ட்ஸ் தான் வந்தது.

Also Read : பிரபல நடிகரின் மகனுடன் ஊர்சுற்றி வரும் பிக்பாஸ் ஜூலி.. புடிச்சாலும் புளியங்கொம்பா புடிச்சிட்டாங்கப்பா!

ஜூலி பிக்பாசை விட்டு வந்த பிறகும் அவருக்கான நெகடிவ் கமெண்ட்ஸ் குறைந்தபாடில்லை. எங்கு சென்றாலும் நெகட்டிவிட்டி மட்டுமே வந்தது. இதையும் தாண்டி ஜூலி பல நிகழ்ச்சிகளில் விருந்தினராகவும், ஆங்கராகவும் கலந்து கொண்டார்.

ஜூலிக்கு மீண்டும் ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது தான் பிக்பாஸ் அல்டிமேட். இந்த வாய்ப்பின் மூலம் ஜூலி தன்னுடைய நெகட்டிவிட்டி அத்தனையும் மாற்றினார். ரசிகர்களும் இப்போது ஜூலியை ஏற்றுக் கொண்டனர். அவருக்கு நிறைய ஆதரவாளர்களும் வந்து விட்டனர். இப்போது பல நிகழ்ச்சிகளில் ஜூலி பங்கேற்கிறார்.

Also Read : அந்த ஜூலியை விட நீங்க நூறு மடங்கு கேவலம்.. மறைமுகமாக கிழித்து தொங்கவிட்ட ரசிகன்

Trending News