விஜய்யுடன் படம் பண்ண வாய்ப்பு இருக்கு.. பிரபல தயாரிப்பாளர் கொடுத்த பேட்டி

Vijay: விஜய் தற்போது எச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் 2026 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9 ரிலீசாக உள்ளது.

அரசியல் பேசும் படமாக எடுக்கப்பட்டுள்ள இந்த படம் விஜய்யின் கடைசி படம் என்று கூறப்படுகிறது. இப்படி இருக்கும் நிலையில் பிரபல தயாரிப்பாளர் விஜய் உடன் படம் பண்ண வாய்ப்பு இருப்பதாக கூறியது பலருக்கும் அதிர்ச்சியில் ஏற்படுத்தி இருக்கிறது.

விஜய்யின் சச்சின் படத்தை தயாரித்தவர் தான் கலைப்புலி தாணு. இதைத்தொடர்ந்து ஏ ஆர் முருகதாஸ், விஜய் கூட்டணியில் உருவான துப்பாக்கி படத்தையும் தயாரித்து இருந்தார். இந்த படம் மிகப்பெரிய லாபத்தை கொடுத்தது.

விஜய்யின் படத்தை தயாரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறிய பிரபல தயாரிப்பாளர்

அதன் பிறகு அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான தெறி படமும் இவர் தான் தயாரித்திருந்தார். சமீபத்தில் நேர்காணலில் கலந்து கொண்ட கலைப்புலி தாணுவிடம் தெறி படத்திற்கு பிறகு ஏன் விஜய் உடன் படம் பண்ணவில்லை என்று கேள்வி கேட்கப்பட்டது.

அதன் பிறகு ஒரு படம் பண்ணுவதாக இருந்தது. சில காரணங்களினால் அது தவறி போய்விட்டது. ஆனால் வரும் நாட்களில் விஜய் உடன் படம் பண்ண வாய்ப்பு இருப்பதாக கலைபுலி கூறியிருந்தார்.

விஜய் தான் சினிமாவை விட்டு அரசியலுக்கு போகிறாரே இது எப்படி சாத்தியமாகும். அரசியலில் வெற்றியோ, தோல்வியோ மீண்டும் சினிமாவுக்கு வரமாட்டேன் என்ற முடிவில் விஜய் உள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் கலைப்புலி தாணு விஜய்யின் படத்தை இயக்குவேன் என்று சொன்னது குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் விஜய்யின் சச்சின் படத்தை வருகின்ற 18 ஆம் தேதி ரீ ரிலீஸ் செய்கிறார் கலைபுலி தாணு.

Leave a Comment

பொழுதுபோக்கு

புகைப்படங்கள்