Serial Actress: ஜீ தமிழ் சீரியல் மூலம் மிகவும் பிரபலமான நடிகை சுபிக்ஷா. இவர் நீதானே என் பொன்வசந்தம் என்ற சீரியலில் ஹீரோவாக நடித்த வந்த ஜெய் ஆகாஷ்க்கு அண்ணியாக மானசி என்ற கேரக்டரில் நடித்து பரிச்சயமானார். அதில் இவர் ப்ரோ இன் லா என்று சொல்லும் அந்த வார்த்தைக்கு ரசிகர்கள் இவரை கவனிக்க ஆரம்பித்தார்கள். அத்துடன் இவருடைய நடிப்பும் பாராட்டக்கூடியதாக இருந்ததால் அடுத்ததாக ரஜினி என்ற சீரியலிலும் நடிக்க ஆரம்பித்தார்.
இந்த நடத்திலும் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றார். தற்போது வீரா என்ற சீரியலில் கண்மணியாக நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவருடைய நடிப்புக்கு குறை சொல்ல முடியாத அளவிற்கு இருப்பதால் வில்லி கேரக்டரில் தொடர்ந்து நடித்து வருகிறார். இப்படி சின்னதிரையில் பிஸியாகி இருக்கும் இவர் நேற்று இரண்டாவது திருமணத்தை காதும் காதுமாக யாருக்கும் தெரியாமல் செய்து இருக்கிறார்.
தொழில் அதிபருடன் இரண்டாவது திருமணத்தை செய்து கொண்ட நடிகை
அதாவது நான்கு வருடங்களுக்கு முன் இவருக்கு மானஸ் என்பவருடன் திருமணம் ஆனது. இவர் சீரியல் நடிகை ஆல்யா மானசா காதலித்த முன்னாள் காதலன். இவர்கள் இருவரும் மானட மயிலாட என்ற நடன நிகழ்ச்சி மூலம் ஒருவரை ஒருவர் காதலிக்க ஆரம்பித்தார்கள். அப்பொழுது ஆல்யாவுக்கு விஜய் டிவி மூலம் ராஜா ராணி சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததால், அதில் நடித்த ஹீரோ சஞ்சீவி உடன் நெருக்கமாக பேசி பழகினார்.
இதை பொறுத்துக் கொள்ள முடியாத மானஸ் அவ்வப்போது பிரச்சனை பண்ண ஆரம்பித்தார். இதனால் ஆலியா உனக்கும் எனக்கும் சரிப்பட்டு வராது என்று இவரை விட்டு பிரிந்து சஞ்சீவை காதலித்து லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்து அதன் பின் கல்யாணம் செய்து கொண்டார். தற்போது இவர்களுக்கு இரண்டு அழகான குழந்தைகள் இருக்கிறது.
இதற்கிடையில் மானசை காதலித்து கல்யாணம் செய்த சுபிக்ஷா திருமண வாழ்க்கையும் கேள்விக்குறியாகிப் போய்விட்டது. அதாவது ஒரு பக்கம் சீரியலில் நடித்து வந்தாலும் இன்னொரு பக்கம் கணவருடன் சேர்ந்து அவ்வப்போது வீடியோக்களை எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார். மானஸ் ஒரு டான்ஸ் மாஸ்டர் என்பதால் சுபிக்ஸாவை வைத்து பல டான்ஸ் வீடியோக்களை எடுத்து வெளியிட்டார்.
இதனைத் தொடர்ந்து மானசுக்கு சீரியலில் நடிக்கவும் வாய்ப்பு கிடைத்தது. அதன் மூலம் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செவ்வந்தி என்ற சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட மனஸ்தாபத்தினால் சுபிக்ஷா, மானசை விட்டு நிரந்தரமாக பிரிந்து விட்டார். கல்யாணம் ஆகி நான்கு வருஷத்திலேயே விவாகரத்து செய்து கொண்ட சுபிக்ஷா, நேற்று இரண்டாவது திருமணத்தை செய்து கொண்டார்.
அந்த வகையில் சோசியல் மீடியாவில் மானசுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை நீக்கிய நிலையில் கேரளாவை சேர்ந்த தொழிலதிபர் அவினாஷ் வாசுதேவன் என்பவரை திருமணம் செய்து கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு சந்தோசமான வாழ்க்கையை தொடங்கி இருக்கிறோம் என்று ரசிகர்களுக்கு பதிவிட்டிருக்கிறார்.
- ஜீ தமிழ் சீரியலில் நடிக்க எதிர்நீச்சல் பிரபலத்திற்கு கிடைத்த வாய்ப்பு
- முக்கியமான சீரியலில் இருந்து விலகும் ஜி தமிழ் கதாநாயகன்
- ஆட்ட நாயகனாக ஜீ தமிழில் ஜொலிக்கும் விஜய் டிவி ஹீரோ