Gossip: வளர்ந்து வரும் இளம் நடிகை ஒருவர் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு எப்போதுமே தன் அம்மாவுடன் வருவது வழக்கம். பல நடிகைகள் இதைத்தான் ஃபாலோ செய்து வருகின்றனர். அதிலும் இந்த தாய்குலம் ரொம்பவே விவரமானவர்.
மகள் உடுத்தும் உடையிலிருந்து தங்கும் அறை வரை அனைத்தையும் அவர் தனக்கு திருப்தியாகும் வரையில் சரி பார்த்து விடுவார். அந்த அளவுக்கு மகளை அவர் பொத்தி பொத்தி பாதுகாத்து வருகிறார்.
ஆனால் நடிகை தற்போது நடித்து வரும் படத்தின் ஹீரோ கொஞ்சம் ஒரு மாதிரி. நடிகையைப் போலவே அவரின் அக்காவும் அம்சமாக இருப்பதை தெரிந்து கொண்ட ஹீரோ அவருக்கு நேக்காக ரூட் போட்டிருக்கிறார்.
நடிகரின் கெட்ட எண்ணம்
நடிகையிடம் உன் அக்காவையும் நடிக்க வைக்கலாம் என ஆசை வார்த்தை கூறியிருக்கிறார். ஆனால் அவருடைய தப்பான எண்ணத்தை புரிந்து கொண்ட நடிகை நடிகரை எதிர்க்க முடியாமல் ஏதேதோ சாக்கு சொல்லி நாளை கடத்தி இருக்கிறார்.
ஆனால் ஹீரோவின் டார்ச்சர் அதிகமாகி இருக்கிறது. அக்காவின் போன் நம்பரை கொடு என தொந்தரவு செய்திருக்கிறார். இதனால் கடுப்பான தாய்குலம் தன் மூத்த பெண்ணை இதில் விருப்பமில்லை என நடிகரிடம் நேரடியாக சொல்ல வைத்திருக்கிறார்.
இதனால் கடுப்பான ஹீரோ தங்கை நடிகையிடம் தன் வேலையை காட்டி இருக்கிறார். பொறுத்து பொறுத்து பார்த்த அம்மணி இது பற்றி இயக்குனரிடம் சத்தம் இல்லாமல் போட்டு கொடுத்து விட்டாராம். அதன் பிறகு நடிகர் தான் உண்டு தன் வேலை உண்டு என கப்சிப் ஆகிவிட்டாராம்.
நடிகையை டார்ச்சர் செய்த ஹீரோ
- போட்ட திட்டம் எல்லாம் புஸ்ஸுன்னு போச்சே
- சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த கூத்து, முகத்திரையை கிழித்த இயக்குனர்
- முதல் மனைவியை விட்டுக் கொடுக்காத ஹீரோ