முன்பெல்லாம் சினிமா துறையில் இருக்கும் நபர்கள் தங்கள் துறையில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தனர். தற்போது காலம் மாறிவிட்டது இயக்குனர்கள் ஹீரோ அவதாரம் எடுக்கிறார்கள். அதேபோன்று ஹீரோ டைரக்சன் செய்கிறார். இப்படி எல்லோரும் பல திறமைகளைக் கொண்டு சாதனை படைத்து வருகிறார்கள்.
அந்த வரிசையில் பிரபல எழுத்தாளர்களாக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த சிலர் சினிமாவில் நடிக்கவும் செய்கிறார்கள். அப்படி எழுத்தாளர்களாக இருந்து சினிமாவிலும் வெற்றி பெற்ற ஆறு நபர்களை பற்றி காண்போம்.
வேல ராமமூர்த்தி: இவர் குற்றப்பரம்பரை, குருதி ஆட்டம், பட்டத்து யானை உள்ளிட்ட பல நாவல்களை எழுதி ரசிகர்களை கவர்ந்தவர். முன்னணி எழுத்தாளர்களில் ஒருவராக இருக்கும் இவர் தற்போது சினிமாவிலும் தன் கவனத்தை பதித்துள்ளார். நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்தில் சூரியின் அப்பாவாக முறைத்து கொண்டு இருப்பவர் தான் இவர். இதுமட்டுமல்லாமல் அண்ணாத்த, எதற்கும் துணிந்தவன் போன்ற பல திரைப் படங்களிலும் இவர் நடித்துள்ளார்.
பவா செல்லத்துரை: எல்லா நாளும் கார்த்திகை உள்ளிட்ட சில படைப்புகளை எழுதி இருக்கும் இவர் ஜோக்கர் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதைத்தொடர்ந்து பேரன்பு, சைக்கோ, ஜெய்பீம் உள்ளிட்ட திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார்.
ஜோ மல்லூரி: இவர் பல கவிதைகள், கட்டுரைகள் போன்றவற்றை எழுதி இருக்கிறார். கும்கி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் அதைத் தொடர்ந்து ஜில்லா, ரம்மி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து என்று ஒரு சிறந்த குணச்சித்திர நடிகராக இருக்கிறார்.
இந்திரா சௌந்தர்ராஜன்: இவர் பல அமானுஷ்யம் மற்றும் திகில் கதைகளையும் சித்தர்கள் சம்பந்தப்பட்ட வரலாற்றையும் எழுதி இருக்கின்றார். இவர் எழுதிய மர்மதேசம் நாவல் சீரியலாக வெளிவந்து பலரையும் மிரட்டியது. தற்போது முன்னணி தமிழ் எழுத்தாளர்களில் ஒருவராக இருக்கும் இவர் ரகசியம் என்ற திரைப்படத்தில் கௌரவ தோற்றத்தில் நடித்துள்ளார்.
மனுஷ்ய புத்திரன்: சிறந்த கவிஞரான இவர் ஆனந்தவிகடன், கல்கி, குமுதம் போன்ற பிரபல பத்திரிகைகளில் பல கவிதைகளை எழுதியுள்ளார். மேலும் மரண தண்டனை, ஜாதி ஒழிப்பு, பெண்கள் விடுதலை போன்ற பல சமூக அரசியல் கருத்துக்களை குறிப்பிட்டு இவர் பல கட்டுரைகள் எழுதியுள்ளார். இவர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சூப்பர் டீலக்ஸ் திரைபடத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.