நீண்ட நாட்களாக காதலித்துக் கொண்டிருந்த லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் சென்னையில் உள்ள பைவ் ஸ்டார் ஹோட்டலில் கடந்த மாதம் 9 ஆம் தேதி கோலாகலமாக நடைபெற்றது.
இவர்களது திருமணத்தை பார்ப்பதற்கும், அதில் யார் யார் கலந்து கொண்டனர் என்பதை அறிந்து கொள்வதற்கும் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருந்தனர். ஆனால் நயன்தாரா தன்னுடைய திருமணத்தை ஏகப்பட்ட கெடுபிடிகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் ரகசியமாக நடத்தி முடித்து விட்டார்.
நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணத்திற்கு பத்திரிக்கையாளர்களை கூட அழைக்கவில்லை. திருமணத்திற்குப் பிறகு அடுத்த நாள் தான் செய்தியாளர் சந்திப்பை நடத்தினர். இதெல்லாம் எதற்கு என்று பலரும் குழம்பி வந்த நிலையில் அதற்கு பின்னால் இருந்த நயன்தாராவின் திட்டம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
சினிமாவில் இருக்கும் நயன்தாரா தனது திருமணத்தையும் பிசினஸ் ஆக்கியது தான் பலரின் ஆச்சரியத்திற்கும் காரணம். அதாவது நயன்-விக்கி திருமண நிகழ்வுகள் அனைத்தையும் ஒளிபரப்பும் உரிமையை அவர் நெட்ப்ளிக்ஸ் ஓடிடி நிறுவனத்திற்கு கொடுத்திருக்கிறார்.
இதன்மூலம் ரூபாய் 25 கோடி காசு பார்க்க நினைத்துள்ளார். இதை அறிந்த ரசிகர்கள் கோபத்தின் உச்சத்துக்கு சென்றுள்ளனர். ‘நீங்கள் நடித்த படத்தை நாங்க காசு கொடுத்து பார்க்கிறோம். அதில் கூட ஒரு நியாயம் இருக்கிறது.
ஆனால் உங்கள் கல்யாணத்தை 25 கோடிக்கு நெட்பிளிக்ஸ்க்கு விட்டுவிட்டீர்கள் . அதையும் நாங்கள் காசு கொடுத்து பார்க்கணுமா? உங்களைத் தலையில் தூக்கி வைத்து ஆடினா, எங்களை முட்டாள் ஆக்கி விடாதீர்கள்’, என நயன்தாராவிற்கு ரசிகர்களின் தரப்பில் இருந்து நாலாபக்கமும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது.