Blue Sattai Maaran: சினிமாக்காரர்களால் அதிகம் வசை பாடப்படுபவர் தான் ப்ளூ சட்டை மாறன். இதற்கு காரணம் இவருடைய ஏடாகூடமான திரை விமர்சனம் தான்.
பெரிய ஹீரோக்களாக இருக்கட்டும், அவர்களின் ரசிகர்களாக இருக்கட்டும் இவருடைய விமர்சனம் பெரிய தலைவலியை ஏற்படுத்தி விடும்.
ஒரு படத்தை எந்த அளவுக்கு பங்கம் செய்ய முடியுமோ அந்த அளவுக்கு செய்து விடுவார்.
இதனாலேயே அந்த நடிகர்களுக்கு எதிர்ப்பாக இருக்கும் ரசிகர்களுக்கு இவருடைய விமர்சனம் வந்தாலே கொண்டாட்டமாக இருக்கும்.
கொண்டாடப்படும் ப்ளூ சட்டை மாறன்
பல நேரங்களில் இவர் மீது சினிமா ரசிகர்கள் கோபத்தை தான் வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
அப்படி இருக்கும் பட்சத்தில் திடீரென ப்ளூ சட்டை மாறன் தலையில் தூக்கி வைத்து கொண்டாடப்பட்டு கொண்டிருக்கிறார்.
என்ன காரணமாக இருக்கும் என ஆராய்ந்து பார்த்தால் தான், என்ன மனுஷன் இவரு என பாராட்டும் அளவுக்கு காரணம் இருக்கிறது.
அதாவது ப்ளூ சட்டை மாறனின் விமர்சனங்கள் பெரிய பட்ஜெட் படங்கள் மற்றும் பெரிய ஹீரோக்களின் படங்களின் போது ரொம்பவும் கேலி கிண்டல் செய்யும் அளவுக்கு இருக்கும்.
ஆனால் நல்ல கதை, சின்ன பட்ஜெட் படங்கள் என்று வந்து விட்டாலே இவர் நல்ல விமர்சனங்களை கொடுத்து வருகிறார்.
பல நேரங்களில் ப்ளூ சட்டை மாறனே நல்லா இருக்குன்னு சொல்லிட்டு இருப்பார் அப்போ பாத்திட வேண்டியதுதான் என மக்கள் முடிவெடுக்கும் அளவுக்கு சூழ்நிலை வந்துவிட்டது.
போர் தொழில், லப்பர் பந்து, என என்று நிறைய கதைகளுக்கு நல்ல விமர்சனங்களை கொடுத்தார். அந்த வரிசையில் மதகத ராஜா படத்திற்கும் இவருடைய விமர்சனம் தரமாக இருந்தது.
இன்று ரிலீஸ் ஆகி இருக்கும் குடும்பஸ்தன் படத்திற்கும் நல்ல விமர்சனத்தை கொடுத்திருக்கிறார்.
சிறிய பட்ஜெட் படங்களின் வெற்றிக்கு ஒரு துளியாவது இவர் காரணமாக இருப்பதால்தான் தற்போது தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்கள்.