கன்னட நடிகர் யஷ் நடித்த கேஜிஎஃப் 2 திரைப்படம் கடந்த வாரம் உலக அளவில் வெளியானது. இதன் முதல் பாகத்துக்கு கிடைத்த வரவேற்பை போலவே இந்த இரண்டாம் பாகத்துக்கும் ரசிகர்கள் மத்தியில் ஏராளமான வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் இப்படம் மீண்டும் ஒரு வசூல் சாதனையை நிகழ்த்தி வருகிறது.
வழக்கம்போல இப்படத்தில் ஹீரோவின் நடிப்பு பலரின் பாராட்டை பெற்று இருந்தாலும் தற்போது யஷ் நடந்து கொண்ட முறையை பார்த்த ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. அதாவது படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட யஷ் அனைத்து ரசிகர்களுக்கும் மிகவும் பிடிக்கும் வகையில் ரொம்பவும் எதார்த்தமாக பேசினார்.
சமீபத்தில் கூட இந்த ஜெனரேஷன் நான் ஒன்று சொல்கிறேன் நமக்குள் எந்தவொரு வேறுபாடும் இருக்க கூடாது எல்லாருமே இந்தியர்கள். அது தமிழ்நாடு கன்னடியன் என்பதை விட்டுவிடுங்கள் நம்ம அதையெல்லாம் மாற்றலாம் ஒருத்தர் இந்தியாவில் என்ன பண்ணாலும் அது இந்தியர்கள் எல்லாரும் சாதிச்ச மாதிரி பார்க்கணும் அது கர்நாடகா அது தமிழ்நாடு ஆந்திரா அந்த மாதிரி எந்த ஒரு வேறுபாடு இருக்கக்கூடாது என மேடையில் பேசினார்.
மேலும் சினிமாவைப் பொறுத்தவரையில் கன்னடன், தமிழன் என்ற எந்த ஒரு அரசியலும் இருக்கக்கூடாது. நாம் அனைவரும் ஒன்றாக இருக்கிறோம் அதனால் ஒன்றாகவே செயல்பட வேண்டும் என்றெல்லாம் நல்லவர் போல் பேசினார். இதைக் கேட்ட ரசிகர்களும் அவரை ரொம்பவும் உயர்வாக நினைத்து பாராட்டி வந்தனர்.
ஆனால் கே ஜி எஃப் படம் வெளியான போது பல இடங்களிலும் கன்னட சினிமா தற்போது முன்னேறி வருவதாக அவர் ஒரு மனதுடன் பேசி வந்தார். அதுமட்டுமல்லாமல் அவருடைய சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு கன்னடனாக இருப்பதில் பெருமைப்படுகிறேன் என்ற வாசகத்தையும் குறிப்பிட்டுள்ளார்.
இதைப்பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு தேவை என்றால் இந்தியன் என்கிறீர்கள் இல்லை என்றால் கன்னடன் என்று சொல்கிறீர்கள் எதற்காக இந்த முகமூடி என்று அவருக்கு எதிராக விமர்சனங்களை முன்வைக்கின்றனர். மேலும் உங்கள் தாய் மொழியை நீங்கள் பெருமையாகக் கூறுவது தவறு இல்லை ஆனால் சில இடங்களில் அதை மறைத்து ஏன் பப்ளிசிட்டி தேட வேண்டும்.
ஒரு நடிகராக நீங்கள் கேமரா முன்பு மட்டும் நடித்தால் போதும் நிஜ வாழ்க்கையில் நடிக்காதீர்கள் எனவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர். மேலும் எதார்த்தமாக பேசுவதாக நினைத்துக்கொண்டு ரசிகர்களை ஏமாற்றாதீர்கள் என்று யஷின் முகத்திரையை அவர்கள் கிழித்தெறிந்து உள்ளனர்.
இதேபோல் தான் காவிரி பிரச்சனையின் போது தமிழர்களுக்கு ரஜினிகாந்த் குரல் கொடுத்தார். ஆனால் அவரது படங்கள் கர்நாடகாவில் ஒளிபரப்பாமல் பிரச்சினை வந்தது அடுத்து உடனே தான் பேசியது தவறு என மன்னிப்பு கேட்டார். இதற்கு பல ரசிகர்களும் ரஜினிகாந்த் இப்படி செய்வார் என எதிர்பார்க்கவில்லை என கூறி வருத்தம் அடைந்தனர்.