செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

அவங்க ஒன்னும் கடவுள் இல்ல.. கேமராவை வச்சு பார்த்தார்களா, மீண்டும் எதிர்ப்பை சம்பாதித்த ராஷ்மிகா

ராஷ்மிகா மந்தனா சினிமாவுக்கு வந்த புதியிலேயே டாப் ஹீரோக்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். அதுவும் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தின் மூலம் அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானார். இப்போது விஜய்க்கு ஜோடியாக வாரிசு படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சில காலமாக சமூக வலைத்தளங்களில் ராஷ்மிகாவை பற்றி சர்ச்சை கருத்துக்களாக தொடர்ந்து வருகிறது. அதாவது கன்னட மொழி படங்களில் தற்போது ராஷ்மிகா நடிப்பதில்லை என்றும் ரொம்ப தலைக்கனம் பிடித்து ஆடுகிறார் என்று கூறுகின்றனர். மேலும் இயக்குனர்களையும் மதிப்பதில்லை என அவர் மீது அவதூறு கருத்துக்கள் வருகிறது.

Also Read : விஜய் இந்த படத்தில் மட்டும் நடிக்கலைனா சினிமாவை விட்டே போயிருப்பாராம்.. தளபதியை தக்கவைத்த மாஸ் படம்

இந்நிலையில் சமீபத்தில் கன்னட மொழியில் வெளியான ரிஷப் ஷெட்டியின் காந்தாரா படம் சக்க போடு போட்டது. அண்மையில் ஒரு பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட போது ராஷ்மிகாவிடம் காந்தாரா படம் எப்படி இருந்தது என்று கேட்டதற்கு படத்தை பார்க்கவில்லை என்று கூறியது மிகவும் சர்ச்சையாக வெடித்தது.

இப்போது இது குறித்து ராஷ்மிகா விளக்கமளித்துள்ளார். அதாவது காந்தாரா படம் வெளியாகும் போது தன்னுடைய பட வேலைகளில் தான் பிஸியாக இருந்ததால் அந்த படத்தை பார்க்க முடியவில்லை. சமீபத்தில் காந்தாரா படத்தை பார்த்தேன் பிரம்மிப்பாக இருந்தது. காந்தாரா படக்குழுவினர்களுக்கு வாழ்த்துக்கள் என்ற தெரிவித்திருந்தார்.

Also Read : உச்ச கட்ட டென்ஷனில் வாரிசு, துணிவு.. பழசை கிளறி மூட்டிவிடும் ப்ளூ சட்டை மாறன்

மேலும் சமூக வலைத்தளங்களில் என்னை பற்றி தவறான செய்தியை பரப்புவதை பற்றி எனக்கு எந்த கவலையும் இல்லை. மேலும் மக்கள் என்ன கடவுளா என்னுள் கேமரா வைத்து பார்த்தார்களா என்று ராஷ்மிகா கோபமாக பேசி உள்ளார். இதன் மூலம் ரசிகர்களின் எதிர்ப்பை
மேலும் ராஷ்மிகா சம்பாதித்துள்ளார்.

இப்போது தான் விஜயின் வாரிசு படத்திற்கான ப்ரோமோஷன் வேலைகள் பிரம்மாண்டமாக நடந்து வருகிறது. இந்நிலையில் ஏடாகூடமாக பேசி ராஷ்மிகா ரசிகர்களிடம் அவப்பெயர் பெற்று வருவதால் படத்திற்கு இது பக்கவிளைவாக இருக்குமோ என்ற வாரிசு பட குழுவினர் பயந்து உள்ளனர்.

Also Read : தூக்கி விட்டவர்களுக்கு செய்த துரோகம், ராஷ்மிகா படங்களில் நடிக்க தடை.. மேலும் அதிர்ச்சி கொடுத்த ரிஷப் ஷெட்டி

Trending News