திங்கட்கிழமை, ஜனவரி 20, 2025

சீதைக்கு ஏத்த ராமனாக மாறிய விக்னேஷ் சிவன்.. ஆத்துல போற தண்ணிய யார் குடிச்சா என்ன சமந்தா

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள காத்துவாக்குல 2 காதல் திரைப்படம் தற்போது ரிலீசுக்கு தயார் நிலையில் உள்ளது. நயன்தாரா, சமந்தா என்ற இரண்டு பெரிய ஹீரோயின்கள் இந்த படத்தில் நடித்திருப்பதால் ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இவர்கள் இருவருக்கும் திரை உலகில் மிகப்பெரிய போட்டி இருக்கிறது என்று சொல்லப்பட்டு வந்த நிலையில் இந்த படத்தில் அவர்கள் எந்த ஈகோவும் இல்லாமல் நடித்துள்ளனர். சொல்ல போனால் இந்தப் படத்தில் நடித்த பிறகு அவர்கள் இருவருக்கும் இடையே ஒரு நல்ல நட்பு உருவாகி விட்டதாம்.

அதை வெளிப்படுத்தும் விதமாக இருவரும் ஒருவருக்கொருவர் கிப்ட் கொடுப்பது, ஒன்றாக நேரத்தை செலவு செய்வது என்று தங்கள் நட்பை வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும் இந்த படத்தில் இடம்பெற்றிருந்த பாட்டுக்கள் மற்றும் ட்ரெய்லர் அனைத்தும் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்துள்ளது.

சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் ஒரு பாடல் காட்சியை பார்த்த ரசிகர்கள் சில கேள்விகளை இயக்குனருக்கு எதிராக முன்வைக்கின்றனர். அதாவது அந்த பாடல் காட்சியில் நயன்தாரா மிகவும் அடக்கமாக புடவையிலும், சமந்தா ஓவர் கிளாமராக மிகக் குறைவான உடையும் அணிந்து டான்ஸ் ஆடுகின்றனர்.

இதுதான் தற்போது ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விக்னேஷ் சிவன் திருமணம் செய்து கொள்ளப் போகும் நயன்தாராவை ஹோம்லி லுக்கில் காட்டி விட்டு சமந்தாவை மட்டும் கிளாமர் கதாபாத்திரத்தில் நடிக்க வைத்துள்ளார். பாடல் காட்சியில் மட்டுமல்லாது படம் முழுக்க இப்படித்தான் அவர் காட்டியிருக்கிறாராம்.

இதைபார்த்த ரசிகர்கள் நீங்கள் கட்டிக்கப்போற பொண்ணுனா ஒரு நியாயம் சமந்தாவுக்கு ஒரு நியாயமா என்று இயக்குனருக்கு எதிராக கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் அவரும் இன்னொருவரின் மனைவி தானே, விவாகரத்து ஆகிவிட்டது என்றால் நீங்கள் இப்படி நடிக்க வைப்பீர்களா என்று கேட்டு வருகின்றனர்.

நயன்தாரா ஒரு படத்தில் சீதையாகவே நடித்திருப்பார் தற்போது சீதைக்கேற்ற ராமனாக விக்னேஷ் சிவன் மாறி வருகிறார் என்று ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். மறுபக்கம் சமந்தாவை பார்க்கும்போது ஆத்துல போற தண்ணிய குடிச்சா என்ன என்ற நிலைமைதான் என்றும் வறுத்தெடுத்து வருகின்றனர்.

Trending News