சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

ஈகோவால் வந்த வினை.. தனுஷ்-ஐஸ்வர்யா போல் பிரியும் விஜய் டிவி பிரபல ஜோடி

ஒருசில சீரியல் நடிகர் நடிகைகள் சேர்ந்து நடிக்கும் போது அவர்களுக்கிடையே காதல் வயப்பட்டு நிஜ வாழ்க்கையில் தம்பதியர்களாக மாறுபடுகின்றனர். அந்த வரிசையில் விஜய் டிவியின் சரவணன் மீனாட்சி பிரபலமான நடிகை ரக்ஷிதா தன்னுடன் விஜய் டிவியின் ‘பிரிவோம் சந்திப்போம்’ சீரியலில் கதாநாயகனாக நடித்த தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

பெங்களூரைச் சேர்ந்த ரக்ஷிதா இந்த சீரியலில் நடிப்பதற்கு முன்பே கன்னடம் மற்றும் தெலுங்கு சீரியல்களில் நடித்து பிரபலமானவர். திருமணத்திற்கு பிறகு ரக்ஷிதா மற்றும் தினேஷ் இருவர் சேர்ந்து மீண்டும் ஜீ தமிழில் ஒளிபரப்பான ‘நாச்சியார்புரம்’ என்ற சீரியலிலும் நடித்தனர்.

இவ்வாறு சீரியல் நடிகையாக மட்டுமல்லாமல் ஒருசில ரியாலிட்டி ஷோக்களில் நடுவராகவும் சின்னத்திரையில் ரக்ஷிதா வலம் வந்து கொண்டிருக்கிறார். சமீபத்தில் கூட கலர்ஸ் தமிழில் புதிதாக துவங்கப்பட்ட ‘சொல்ல மறந்த கதை’ என்ற புத்தம்புது சீரியலில் ரக்ஷிதா கதாநாயகியாக முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இவ்வாறு பல்வேறு வாய்ப்புகளை தன் வசப்படுத்தியிருக்கும் ரக்ஷிதாவை விட தினேஷுக்கு சீரியல்களில் தற்சமயம் வாய்ப்பு இல்லாமல் தவிக்கிறார். இதனால் ரக்ஷிதா மற்றும் தினேஷ் இருவருக்கும் இடையே குடும்பத்தில் சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது.

மனைவி தன்னை விட அதிகம் சம்பாதிக்கிறார் என்றும் தனக்கு சீரியல் வாய்ப்புக் கிடைக்கவில்லை என்றும் தினேஷ் அதிகம் கவலைப்படுகிறார். இதனால் அடிக்கடி சண்டை ஏற்படுவதால் ஒரே வீட்டில் இருந்தால் பிரச்சனை பெரிதாகி விடும் என்பதால் இருவரும் தனித்தனியாக அவர்களது வீட்டில் வசித்து வருகின்றனர்.

எனவே இவர்களுக்கு இடையே இருக்கும் பிரச்சினையை சரி செய்வதற்காக இடையில் புகுந்த நண்பர்கள் பிரச்சினையை பெரிதாக்கி விடுகின்றனராம். தற்போது சோஷியல் மீடியாவில் பெரிதும் பேசப்படும் ரக்ஷிதா மற்றும் தினேஷ் இருவருக்கும் சண்டை முற்றி போய்விட்டதால் இடையில் நண்பர்கள் சென்று மூக்கை நுழைக்காதீர்கள் என்றும் ரசிகர்கள் கெஞ்சுகின்றனர்.

Trending News