திங்கட்கிழமை, ஜனவரி 20, 2025

உள்ளாடையை பரிசாக அனுப்புவாங்க.. ஐட்டம் சாங் நடிகைக்கு நேர்ந்த பரிதாபம்

சினிமாவில் ஒரு நடிகை நடிக்க வந்து விட்டாலே அவர் தேர்ந்தெடுக்கும் கதாபாத்திரங்கள் தான் அவருடைய திரை பயணத்தை முடிவு செய்கிறது. வாய்ப்பு கிடைக்கிறதே என்று ஏதோ ஒரு கேரக்டரில் நடிக்க ஆரம்பித்துவிட்டால் அந்த நடிகைக்கு அதன் பிறகு அது போன்ற கேரக்டர்கள் தான் கிடைக்கும்.

அப்படி ஒரு சூழ்நிலைக்கு தள்ளப்பட்டவர் தான் அந்த நடிகை. சினிமாவில் ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்ற கனவுடன் வந்த அந்த நடிகைக்கு கிடைத்தது என்னவோ கவர்ச்சியான வேடங்கள் தான். ஆரம்பத்தில் கிடைத்த வாய்ப்பை ஏற்றுக்கொண்ட நடிகை அதன் பிறகு கவர்ச்சி நடிகையாகவே முத்திரை குத்தப்பட்டது தான் பெரும் சோகம்.

பிறகு பல திரைப்படங்களில் கவர்ச்சி நடனம் ஆடிய அவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இவருடைய ஆட்டத்தை பார்ப்பதற்காகவே தியேட்டர்களில் கூட்டம் குவியும். அந்த அளவுக்கு பிரபலமாக இருந்த இந்த நடிகை பல மொழிகளில் உள்ள முன்னணி ஹீரோக்கள் பலருடனும் நடித்துள்ளார்.

அந்த வகையில் முன்னணி கதாநாயகிகளுக்கு போட்டியாக இருந்த கவர்ச்சி நடிகையும் இவர்தான். இப்படி பேரும் புகழும் கிடைத்தாலும் இறுதிவரை கவர்ச்சி நடிகையாகவே இருந்து விட்டோமே என்ற மனகுறையும் நடிகைக்கு இருக்கத்தான் செய்கிறது.

அதிலும் கவர்ச்சி நடிகை என்றாலே மோசமாக பேசும் இந்த சமூகத்தில் நடிகையின் ரசிகர்கள் அவருக்கு உள்ளாடைகளை பரிசாக அனுப்பிய சம்பவமும் உண்டு. இதையெல்லாம் பார்த்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்த நடிகை ஒரு காலத்திற்குப் பிறகு சினிமாவை விட்டு ஒதுங்கி விட்டார். இருப்பினும் நடிகையின் நடனத்திறமை இப்போதும் கூட திரையுலகில் புகழ்ந்து பேசப்பட்டு வருகிறது.

Trending News