Oviya: பட வாய்ப்புகள் இல்லை என்றாலும் ஓவியாவுக்கு என தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. எத்தனையோ படங்களில் அவர் நடித்திருந்தாலும் கூட பிக்பாஸ் தான் அவருக்கு இன்று வரை அடையாளமாக இருக்கிறது.

இவருக்காக தனி ஆர்மி ஆரம்பித்து தலைவி என கொண்டாடிய ரசிகர்கள் இப்போதும் அதே அன்புடன் இருக்கின்றனர். அதற்கு ஏற்றார் போல் ஓவியாவும் ரசிகர்களிடம் ஜாலியாக கலந்துரையாடுவார்.
சமீபத்தில் கூட அவருடைய வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. முழு வீடியோவும் கிடைக்குமா என ரசிகர்கள் கேட்டதற்கு அடுத்த டைம் ப்ரோ என கூலாக தக் லைஃப் பதில் கொடுத்தார்.
இப்படி ரொம்பவும் ஓப்பன் டைப் ஆக இருக்கும் அவர் தற்போது கடற்கரையில் காத்து வாங்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தான் விஷயமே இருக்கிறது.
கூலாக புகை பிடிக்கும் ஓவியா
அந்த வீடியோவில் அவர் ஜாலியாக தன்னுடைய தோழி நண்பர்கள் அனைவரையும் அறிமுகப்படுத்துகிறார். அத்துடன் ஸ்டைலாக புகைப்பிடித்த படியும் போஸ் கொடுக்கிறார்.
அந்த வீடியோவுக்கு இப்போது ஏகப்பட்ட கமெண்டுகள் குவிந்து வருகிறது. சிலர் தலைவி மாஸ் கெத்து என பாராட்டி வருகின்றனர்.
இன்னும் சில ரசிகர்கள் இந்த பழக்கம் வேண்டாம் என அறிவுரை கூறி வருகின்றனர். இப்படியாக அவருடைய வீடியோ தற்போது ட்ரெண்டிங்கில் பட்டையை கிளப்பி வருகிறது.
நீண்ட நாட்களுக்குப் பிறகு தற்போது ஓவியா ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இந்த சமயத்தில் இப்படி ஒரு வீடியோவை வெளியிட்டு மாஸ் காட்டி இருக்கும் தலைவி உண்மையிலேயே ஓப்பன் டைப் தான்.