புதன்கிழமை, ஜனவரி 15, 2025

அதைப்பற்றி ஓபனாக பேசிய இளம் நடிகை.. விளம்பரத்தால் வெடித்த சர்ச்சை

தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக இருக்கும் அந்த இளம் நடிகை தமிழிலும் ஓரிரு திரைப்படங்களில் நடித்துள்ளார். அந்தப் படங்கள் பெரிய அளவில் வரவேற்பை பெறாவிட்டாலும் அம்மணிக்கு தமிழ்நாட்டிலும் ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர்.

அதனால் ரசிகர்களை கவரும் வகையில் அவர் தன்னுடைய கிளாமர் போட்டோக்களை சோசியல் மீடியாவில் தொடர்ந்து பதிவிட்டு வந்தார். இதன் மூலம் அவருக்கு சோசியல் மீடியாவிலும் எண்ணற்ற ரசிகர்கள் இருக்கின்றனர். சொல்லப்போனால் நடிகைக்கு கோவில் கட்டும் அளவுக்கு ரசிகர்கள் இருக்கின்றனர்.

ஒருபுறம் நடிகையின் கவர்ச்சி போட்டோக்களை பார்த்து ரசித்துக் கொண்டிருக்கும் ரசிகர்கள் மறுபுறம் அவரின் எல்லை மீறிய சில விஷயங்களை கண்டித்து கிண்டல் செய்தும் வருகின்றனர். அந்த வகையில் நடிகை தற்போது ஒரு சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.

சமீபகாலமாக நடிகைகள் பலரும் பணத்திற்காக ஏடாகூடமான விளம்பரங்களுக்கு பிரமோஷன் செய்து வருகின்றனர். அதில் மதுபானம், உள்ளாடை போன்ற பலவற்றுக்கும் நடிகைகள் பிரமோஷன் செய்கின்றனர். அந்த வரிசையில் இந்த இளம் நடிகை காண்டம் விளம்பரத்திற்கு பிரமோஷன் செய்து பலருக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

மேலும் அவர் அந்த விளம்பரத்தில் உடல் உறவு குறித்து மிகவும் ஓப்பனாக பேசியுள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் அவரை கண்டபடி விமர்சித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். பணத்துக்காக இப்படி எல்லாமா பேசுவது என்று அவருக்கு எதிராக கமெண்ட்டுகள் வந்து கொண்டிருக்கிறது.

நடிகை தற்போது தமிழ் சினிமாவில் பிரபலமாக இருக்கும் அந்த வாரிசு நடிகருடன் காதலில் இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. விரைவில் அவர்கள் திருமணம் செய்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நடிகை இப்படி எல்லாம் விளம்பரத்தில் நடிப்பது சம்மந்தப்பட்ட நடிகருக்கு வருத்தத்தை கொடுத்திருப்பதாகவும் கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

Trending News