வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

சிவகுமார் போல் செல்பி எடுக்க மறுத்த அனுபமா.. பதிலுக்கு ரசிகர்கள் செய்த அசத்தலான செயல்

சினிமா மற்றும் அரசியல் இது ரெண்டும்தான் ரசிகர்களை வெகுவாக கவர்கிறது. இந்த இரு தொழில்களில் சார்ந்தவர்கள் தங்களது சொந்த வாழ்க்கையை மிகவும் ரகசியமாக வைத்துக்கொள்ள முடியாது. மேலும் சாதாரண மக்கள் போல் இவர்கள் வெளியில் செல்வது மிகவும் சுலபம் கிடையாது.

ஏதாவது நிகழ்ச்சிகளுக்காக இவர்கள் வெளியே வந்தால் ரசிகர்கள் இவர்களை சூழ்ந்துகொண்ட செல்ஃபி எடுக்க முயல்கின்றனர். சில பிரபலங்கள் ரசிகர்களுக்காக புகைப்படம் எடுப்பதை அனுமதிக்கிறார்கள். ஆனால் சிலர் இதுபோன்ற விஷயங்களை எரிச்சலாக உணர்கின்றனர்.

அதேபோல் நடிகர் சிவகுமார்யிடம் செல்பி எடுக்க வந்த ரசிகர் ஒருவரின் செல்போனை தட்டிவிட்டு சிவகுமார் சென்றார். இது அப்போது மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது. தற்போது இதே போன்று நடிகை அனுபமாவிற்கும் நடந்துள்ளது. பிரேமம் படத்தின் மூலம் தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை அனுபமா.

இவர் தமிழில் தனுசுக்கு ஜோடியாக கொடி படத்தில் நடித்திருந்தார். தமிழில் பட வாய்ப்பு சரியாக கிடைக்காததால் தெலுங்கில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் அங்கு பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் ஒரு கடை திறப்பு விழாவிற்காக அனுபமா வந்துள்ளார்.

அவர் வருவதை அறிந்த ரசிகர்கள் முன்கூட்டியே கடை முன் குவிந்துள்ளனர். இதனால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் திறப்பு விழாவை முடித்து வெளியே வந்த அனுபமாவிடம் செல்பி எடுக்க ரசிகர்கள் முயன்றுள்ளனர். ஆனால் கூட்ட நெரிசல் காரணமாக அனுபமா காரில் ஏறியுள்ளார்.

இதனால் கோபம் அடைந்த ரசிகர்கள் அனுபமா கார் டயரில் உள்ள காற்றை பிடிங்கிவிட்டனர். இதனால் கடை உரிமையாளர் மீண்டும் அனுபமாவை கடைக்குள் அழைத்து, கடையின் பின்புறமாக வேறு ஒரு காரில் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அங்கு சிறிது நேரம் சலசலப்பை ஏற்படுத்தியது.

Trending News