ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 24, 2024

டிஆர்பி-யில் ஓவராக பந்தா காட்டிய விஜய் டிவி.. ராஜா ராணி சீரியலுக்கு வந்த புதிய சிக்கல்

சின்னத்திரை தொடர்கள் மூலம் பிரபலமான ஆலியா, நடிகைகளுக்கு இணையான ரசிகர் கூட்டத்தை வைத்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி தொடரில் கதாநாயகியாக அறிமுகமான ஆலியா தற்போது இத்தொடரின் இரண்டாம் பாகத்தில் நடித்து வந்தார்.

ராஜா ராணி 2 தொடரில் ஐபிஎஸ் ஆக வேண்டும் என்ற கனவில் உள்ள சந்தியாவின் திருமண வாழ்க்கையால் கதை தலைகீழாக மாறுகிறது. சந்தியாவின் மாமியார் சிவகாமிக்கு போலீஸ் என்றாலே பிடிக்காது. இதனால் சந்தியாவை குடும்பத்தை பார்த்தால் மட்டும் போதும் ஐபிஎஸ் எல்லாம் வேண்டாம் என கூறுகிறார்.

சந்தியாவின் கணவர் சரவணன் மனைவியின் கனவுக்கு உறுதுணையாக உள்ளார். இதனால் புதிய திருப்பங்களுடன் ராஜா ராணி 2 தொடர் வர உள்ளது. இந்நிலையில் இத்தொடரில் சந்தியாவாக நடித்த ஆலியா இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்ததால் தொடரில் இருந்து விலக உள்ளார் என்ற செய்தி வெளியானது.

ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த ஆலியா, எப்போதுமே ஒரே சந்தியா அது இந்த ஆலியா என கூறியிருந்தார். அதுபடியே நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் போதும் இத்தொடரில் நடித்து வந்தார். சமீபத்தில் ஆலியா இனி சந்தியாவாக இவர்தான் என நடிகை ரியாவை அறிமுகம் செய்து வைத்தார் புரோமோ வெளியாகியிருந்தது.

இந்நிலையில் தற்போது ஆலியாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் ஆலியா சொன்னது போலவே சிறிது காலம் விடுப்பு எடுத்து விட்டு மீண்டும் சந்தியாவாக ராஜா ராணி தொடரில் நடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர்.

சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ஆலியாவிடம் மீண்டும் எப்போது ராஜா ராணி தொடரில் கம்பேக் கொடுக்கப் போகிறீர்கள் என்று ரசிகர்கள் கேட்டுள்ளனர். அதற்கு பதிலளித்த ஆலியா இனிமேல் ரியா தான் நிரந்தர சந்தியாவாக நடிக்கயுள்ளார் என கூறியுள்ளார். இதைக் கேட்ட ரசிகர்கள் ஆலியா என மாற்றி மாற்றிப் பேசுகிறார் என்று அவர் மீது கடுப்பில் உள்ளனர்.

- Advertisement -spot_img

Trending News