வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

உயிர் பயத்தைக் காட்டிய ஃபர்ஹானா.. ஐஸ்வர்யா ராஜேஷுக்கு இந்த நிலைமையா!

மாசத்துக்கு இரண்டு படமாவது ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியாகிவிடும். அந்த அளவிற்கு தற்போது தமிழ் சினிமாவில் செம பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் இவருடைய நிலைமை இப்படி ஆகிவிட்டதே என ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை ஆதங்கப்படுகின்றனர். ஏனென்றால் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் கடந்த வார வெள்ளிக்கிழமை வெளியான திரைப்படம் தான் ஃபர்ஹானா.

இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் செல்வராகவன், ஜித்தன் ரமேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு தற்போது கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளது. அதே சமயம் இந்த படத்திற்கு கடுமையான எதிர்ப்புக்கும் கிளம்புகிறது. சில ஊர்களின் இந்தப் படத்தின் காட்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. தியேட்டர்களில் போலீஸ் பாதுகாப்பு எல்லாம் போடப்பட்ட நிகழ்வுகளும் சில ஊர்களில் நடந்துள்ளது.

Also Read: ஐஸ்வர்யா ராஜேஷின் ஃபர்ஹானா தேறுமா? அனல் பறக்கும் ட்விட்டர் விமர்சனம்

அது மட்டுமல்ல சென்னை தி நகரில் உள்ள நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வீட்டிற்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சமீபத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பிய ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தில் இந்து பெண்கள் இஸ்லாமியர்களாக சித்தரிக்கப்பட்டு தீவிரவாத செயல்களில் ஈடுபடுத்துவது போல் படத்தை எடுத்திருந்தனர். இதனால் அந்தப் படத்திற்கு பல எதிர்ப்புகள் கிளம்பியது. அதேபோன்று ஃபர்ஹானா படத்தையும் திரையிடக்கூடாது என எதிர்கின்றனர்.

இந்த படத்தில் முஸ்லிம் பெண்கள் அணியும் பர்தா ஆடையை தீயில் இட்டு எரிப்பது போல் காட்டியுள்ளனர். இந்த காட்சியை குறிப்பிட்டு பலரும் சோசியல் மீடியாவில் தங்களது கோபத்தை வெளிப்படுத்துகின்றனர். ஆனால் பட குழுவினர் இந்த படத்தில் இஸ்லாமிய மதத்திற்கு எதிராகவோ அல்லது பிரச்சாரம் செய்யக்கூடிய வகையிலோ எதுவுமே காட்டப்படவில்லை என்று பலமுறை விளக்கம் அளித்துள்ளனர்.

Also Read: Farhana Movie Review – ஃபர்ஹானா இஸ்லாமியருக்கு எதிரான படமா.? முழு விமர்சனம் இதோ!

ஆனால் அதையெல்லாம் அவர்கள் ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை. இதனால் இந்த படத்தில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷுக்கு எதிர்ப்பு தெரிவது இஸ்லாமியர்கள் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். அது மட்டுமல்ல ஐஸ்வர்யா ராஜேஷுக்கு ஒரு தரப்பினர் மிரட்டல் விடுப்பதாகவும் தெரிகிறது.

இதனால் தான் இவருடைய வீட்டிற்கு இப்போது போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுழற்சி முறையில் நான்கு காவலர்கள் ஐஸ்வர்யாவின் வீட்டில் பாதுகாப்பு மேற்கொண்டு வருகின்றனர். இதனால் நேற்று கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடந்த அன்னையர் தின விழாவில் விருது வழங்கும் பட்டியலில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் பெயர் இடம் பெற்றிருக்கிறது.

Also Read: காற்று வாங்கிய தியேட்டர்.. தொடர் பிளாப்பால் விரக்தியில் ஐஸ்வர்யா ராஜேஷ்

ஆனால் இந்த நிகழ்ச்சியில் அவர் கலந்துகொள்ள கொள்ளவில்லை. அவருக்கு பதில் அவருடைய தாய் நாகமணி சென்று அந்த விருதை வாங்கி வந்துள்ளார். அந்த அளவுக்கு ஃபர்ஹானா படத்தில் நடித்ததால் இவருக்கு உயிர் பயத்தை காட்டிவிட்டனர். இப்போது நிலைமை மோசமாக இருப்பதால் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் ஐஸ்வர்யா ராஜேஷ் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கிறார்

Trending News