ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 26, 2025

பீதியைக் கிளப்பிய வலிமை, பீஸ்ட்.. வாரிசு படத்தால் திருப்தி அடையாத விஜய்

கோலிவுட்டில் டாப் ஹீரோவாக இருக்கும் விஜய் மற்றும் அஜித் இருவருக்கும் அவர்களின் கடைசி படங்களான பீஸ்ட் மற்றும் வலிமை ரசிகர்களிடம் போதிய வரவேற்பு கிடைக்காமல் கலவையான விமர்சனத்தை பெற்றது. ஆகையால் பீஸ்ட், வலிமை படத்தை மனதில் வைத்துக் கொண்டு விஜய் தற்போது திருப்தி அடையாத நிலையில் உள்ளார்.

அதாவது தெலுங்கு பிரபல இயக்குனர் வம்சி இயக்கத்தில் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் வாரிசு படத்தை தெலுங்கு தயாரிப்பாளர்  தில் ராஜு தயாரித்திருக்கிறார். இந்தப் படத்தை உலகம் முழுவதும் கோலாகலமாக ரிலீஸ் செய்ய வேண்டும் என தற்போது வாரிசு படத்திற்கான பட பிரமோஷன்களை பிரம்மாண்டமாக நடத்திக் கொண்டிருக்கிறார்.

Also Read: மாச கணக்கில் காத்து கிடந்த லோகேஷ்.. கூலாக டாட்டா காட்டிய தளபதி

இருப்பினும் தற்போது  வாரிசு முழு படத்தையும் விஜய், தில் ராஜு மற்றும் வம்சி உள்ளிட்ட நேற்று சேர்ந்து பார்த்துள்ளனர். படத்தைப் பார்த்த பிறகு தான் விஜய்க்கும் தில் ராஜுவுக்கும் ஒரு விதமான பதட்டம் ஏற்பட்டு படத்தில் அதிரடி மாற்றத்தை ஏற்படுத்தி சொல்லிருக்கின்றனர்.

ஏனென்றால் வாரிசு படத்தின் ரிலீசுக்கு பின் நிச்சயம் அதன் பைனல் அவுட் புட்டை எடுக்கும் முனைப்பில் இருக்கின்றனர். ஆனால் படத்தின் நீளத்தில் தில் ராஜு திருப்தி அடைந்ததாக தெரியவில்லை. சமீபத்தில் சில படங்களின் நீளமே அதன் வெற்றிக்கு எதிராக அமைகிறது.  படத்தின் அதிக நேரத்தால் ரசிகர்கள் எரிச்சல் அடைகின்றனர்.

Also Read: வாரிசு, துணிவை விட இந்த படங்களுக்கு தான் எதிர்பார்ப்பு ஜாஸ்தியா.. 2023-னின் ஆரம்பத்திலேயே ரணகளமாகும் இணையதளம்

வாரிசு படம் முதல் பாதி ஒரு மணி நேரம் 15 நிமிடம். இந்த படத்தில் செகண்ட் ஆஃப் 1 மணி நேரம் 27 நிமிடம். கிட்டத்தட்ட இதுவே இரண்டே முக்கால் மணி நேரம் ஆகிறது. அதனால் படத்தின் நீளத்தை குறைத்தால் நன்றாக இருக்கும் என்று திட்டம் போட்டு வருகிறாராம்.

ஆகையால் வாரிசு படத்தில் தேவையில்லாத காட்சிகளை நீக்கிவிட்டு படத்தின் நேரத்தை சுருக்க வேண்டும் என வம்சியிடம் தில் ராஜு மற்றும் விஜய் இருவரும் சேர்ந்து ஸ்டிட்டாக சொல்லிவிட்டனர். அத்துடன் பீஸ்ட் படத்திற்குப் பிறகு நிச்சயம் தன்னுடைய ரசிகர்களுக்கு தீனி போடும் விதமாக வாரிசு படத்தை கொடுக்க வேண்டும் என்ற முனைப்புடன் விஜய் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

Also Read: தளபதி 67-ல் வில்லனாக களமிறங்கும் 2 இயக்குனர்கள்.. அதிகாரப்பூர்வமான தகவலை வெளியிட்ட லோகேஷ்

Trending News