புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

பிப்ரவரி 23 வெளியாகும் 8 தமிழ் படங்கள்.. கடைசியாக மயில்சாமி நடித்த கிளாஸ்மேட்ஸ்

February 23 Theatre Release Movies : கடந்த வாரம் வெள்ளிக்கிழமை ஜெயம் ரவி நடிப்பில் உருவான சைரன் படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் வருகின்ற பிப்ரவரி 23ஆம் தேதி ரசிகர்களை மகிழ்விக்க கிட்டத்தட்ட 8 படங்களில் தமிழில் வெளியாகிறது. அவை என்னென்ன படங்கள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

ரணம் : வைபவ்வின் 25வது படம் தான் ரணம். பொதுவாக காமெடி கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் வைபவ் புதுமுயற்சியாக திரில்லர் படமான ரணம் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நந்திதா ஸ்வேதா, தன்யா ஹோப் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் பிப்ரவரி 23 வெளியாகிறது.

வித்தைக்காரன் : காமெடி நடிகர் சதீஷ் இப்போது ஹீரோவாக பல படங்களில் நடித்த நிலையில் வெங்கி இயக்கத்தில் உருவாகியுள்ள வித்தைக்காரன் படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தில் சிம்ரன் குப்தா, ஆனந்த்ராஜ் போன்ற பலர் நடித்துள்ள நிலையில் வருகின்ற வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாகிறது.

பாம்பாட்டம் : ஜீவன், ரித்திகா, யாஷிகா ஆனந்த் மற்றும் பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் பாம்பாட்டம். இந்த படம் பாம்பை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருக்கிறார்கள். பல வருடங்களாக படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் இப்போது ஒரு வழியாக ரிலீசுக்கு வந்துள்ளது.

ஆபரேஷன் லைலா : வெங்கடேஷ் இயக்கத்தில் செல்வம் பொன்னயன் தயாரிப்பில் ஸ்ரீகாந்த், ஷாதிகா, ஷர்மா, இமான் அண்ணாச்சி மற்றும் வின்சென்ட் அசோக் ஆகியோர் நடிப்பில் உருவாக்கி இருக்கும் படம் தான் ஆபரேஷன் லைலா. இந்த படமும் வருகின்ற பிப்ரவரி 23 திரையரங்குகளில் வெளியாகிறது.

Also Read : வைபவ் நடித்து ஹிட்டான 5 படங்கள்.. தனியா நின்னா மனுஷன் ஜெயிக்க முடியாது போல

பைரி : புதுமுக நடிகர்களான சையது மஜீத், மேக்னா எலன், விஜி சேகர் ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் தான் பைரி. இப்படம் புறாக்களை வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த படம் கண்டிப்பாக மிகப்பெரிய தாக்கத்தை ரசிகர்களிடம் ஏற்படுத்தும் என்று இயக்குனர் கூறி இருக்கிறார்.

பர்த் மார்க் : சார்பட்டா பரம்பரை படத்தில் நடித்த ஷபீர் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் தான் பர்த் மார்க். இப்படத்தில் கதாநாயகியாக மிர்னா நடித்துள்ளார். விக்ரமன் ஸ்ரீதரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படமும் வருகின்ற வெள்ளிக்கிழமை வெளியாகிறது.

கிளாஸ் மேட்ஸ் : மறைந்த நடிகர் மயில்சாமி கடைசியாக நடித்துள்ள படம் தான் கிளாஸ்மேட்ஸ். கலகலப்பாக எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் அங்கையற்கண்ணன், சரவணன் சக்தி மற்றும் பிரணவ் ஆகியோர் நடிக்கின்றனர்.

நினைவெல்லாம் நீயடா : ஆதிராஜன் இயக்கத்தில் கேப்ரில்லா, யுவஸ்ரீ, ரெடின் கிங்ஸ்லி, மனோபாலா, காளி வெங்கட் ஆகியோர் நடித்துள்ள படம் தான் நினைவெல்லாம் நீயடா. இந்த படத்தின் தயாரிப்பாளர் மீது சம்பள பாக்கி இருப்பதாக சமீபத்தில் மனுஷா யாதவ் புகார் கொடுத்து இருந்தார். இப்போது இந்த படமும் பிப்ரவரி 23 வெளியாகிறது.

Also Read : 2023ல் உயிரிழந்த 10க்கும் மேற்பட்ட சினிமா கலைஞர்கள்.. கண் கலங்க வைத்த மயில்சாமி, குணசேகரன்

Trending News