புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

சூப்பர் ஹிட் கதை வைத்துள்ள இயக்குனர்.. அஜித் தலை அசைத்தா மட்டும் போதும்

சமீபத்தில் ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான வலிமை படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில் வினோத், போனிகபூர், அஜித் ஆகியோர் கூட்டணியில் மீண்டும் அடுத்த படம் உருவாக உள்ளது.

டிவிட்டரில் சில நாட்களுக்கு முன் அஜித்தின் Ak 61 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை போனிகபூர் வெளியிட்டிருந்தார். Ak 61 படத்தின் படப்பிடிப்பு மார்ச் 9ஆம் தேதி தொடங்க உள்ளது.சமீபகாலமாக அஜித் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

அதேபோல் இயக்குனர் சுதா கொங்கராவும் வித்தியாசமான கதைகளை வைத்து படங்களை இயக்கி வருகிறார். சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றிருந்தது.

இந்நிலையில் அஜித்தை வைத்து சுதா கொங்கரா படம் இயக்க உள்ளதாக அண்மையில் தகவல் வெளியானது. அஜித், சுதா கொங்கரா கூட்டணி இணையப் போவது எப்போது என ஜிவி பிரகாஷ்யிடம் ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

அதற்கு, சுதா கொங்கரா அஜித்துக்காக ஒரு சிறந்த கதை வைத்திருப்பதாகவும், அந்த கதை அமைந்தால் பயங்கரமாக இருக்கும் என ஜிவி பிரகாஷ் பதில் வைத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் அந்த படத்திற்கு நானே இசையமைப்பேன் என ஜிவி உறுதியளித்துள்ளார். இதனால் வினோத்துக்கு பிறகு சுதா கொங்கரா அஜித் வைத்து படம் இயக்கயுள்ளார் என்பது உறுதியாகியுள்ளது.

மேலும் இப்படத்தில் அஜித்தின் காட்சிகள் ஒவ்வொன்றும் ரசிகர்களுக்கு பிடிக்கும் விதமாகவும், யாரும் எதிர்பார்க்காத சில காட்சிகளில் இருக்கும் எனவும் கூறியுள்ளார். இப்படம் உருவானால் அஜித்திற்கும், சுதா கொங்குராவுக்கும் கண்டிப்பாக ஒரு மிகப்பெரிய வெற்றி கிடைக்கும் எனவும் ஜிவி தெரிவித்துள்ளார்

Trending News