புதன்கிழமை, ஜனவரி 15, 2025

7.5 கோடி ஃபெராரி காருடன் புகைப்படம் வெளியிட்ட விக்னேஷ் சிவன்.. படம் ப்ளாப் ஆனாலும் மனுஷன் கெத்து தான்

சமீபத்தில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான காத்துவாக்குல 2 காதல் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இப்படத்தை ரவுடி பிக்சர்ஸ் மூலம் நயன்தாரா, விக்னேஷ் சிவன் தயாரித்திருந்தனர். விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா என முன்னணி பிரபலங்களை வைத்து படங்கள் எடுத்ததால் ஓரளவு நல்ல வசூலைப் பெற்றுள்ளது.

மேலும் நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரும் சினிமாவை தாண்டி பல தொழில்களில் முதலீடு செய்து கல்லா கட்டி வருகிறார்கள். இந்நிலையில் விக்னேஷ்சிவனுக்கு நீண்டநாட்களாக ஃபெராரி கார் மீது ஆசை இருந்துள்ளது. மேலும் தன்னுடைய போனின் கேஸில் ஃபெராரி காரின் லோகோவை தான் வைத்துள்ளார். அந்த அளவுக்கு அந்த காரின் மீது மோகம் கொண்டுள்ளார் விக்னேஷ் சிவன்.

இந்நிலையில் ஃபெராரி SF90 காரின் டெஸ்ட் டிரைவிங் செய்துள்ளார் விக்னேஷ் சிவன். இந்த புகைப்படங்களை தன் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்ட அதில் சென்ற அனுபவத்தை மகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார். மேலும் இந்த காரின் மதிப்பு 7.5 கோடியாம்.

மேலும் சிவப்பு நிறமுடைய ஃபெராரி காரின் முன்பு கெத்தாக போஸ் கொடுக்கிறார் விக்னேஷ் சிவன். அநேகமாக இந்த போட்டோவை நயன் தான் எடுத்திருப்பார் என அவரது ரசிகர்கள் கமெண்டுகளை தெறிக்கவிட்டு வருகின்றனர். இந்நிலையில் அடுத்ததாக அஜித்தின் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கப் போகிறார்.

இதைத் தொடர்ந்து இந்த வருடத்திற்குள் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் திருமணம் நடைபெறும் எனவும் கூறப்படுகிறது. மேலும் இந்த ஆண்டு ஃபெராரி கார், அஜித் படம், நயன்தாராவுடன் திருமணம் என விக்னேஷ் சிவனுக்கு தொடர்ந்து பல நல்ல விஷயங்கள் நடக்க உள்ளது.

ferrari-vignesh-shivan-1
ferrari-vignesh-shivan-1

ஒரு தோல்விக்குப் பிறகு பல நல்ல விஷயங்கள் நடக்கும் என்று கூறுவார்கள். அதேபோல் விக்னேஷ் சிவனுக்கு காத்துவாக்குல 2 காதல் படம் தோல்வி ஆனாலும் அவர் ஜாதகத்தில் குரு உச்சத்தில் இருப்பது போல் தொடர்ந்து பல நல்ல விஷயங்கள் நடந்து வருகிறது.

ferrari-vignesh-shivan-1
ferrari-vignesh-shivan-1

Trending News