வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

Rajini: மதுப்பிரியர் இளையராஜா குடியை விட்ட கதை.. பாரதிராஜா, ரஜினிக்கும் நடுவே வந்த கைகலப்பு

சுசி லீக்ஸ் இதுதான் இப்பொழுது சமூக வலைதளத்தையே புரட்டி போட்டுக் கொண்டிருக்கிறது. இந்த பார்ட்டி, போதை கலாச்சாரம் எல்லாம் இன்று நேற்று வந்ததில்லை 80 90களில் இருந்தே சினிமா துறையினர் பின்பற்றி வருகிறார்கள்.

அவர்கள் ஒரு படத்தின் வெற்றி விழாவை கொண்டாடுவதற்கு இத்தகைய பார்ட்டியை கொடுப்பார்கள் அப்படி மவுண்ட் ரோடு அருகே உள்ள ஒரு பெரிய ஹோட்டலில் நடந்த பார்ட்டியில் வந்த கைகலப்பால் தான் இளையராஜா குடிப்பழக்கத்தை விட்டுள்ளார்.

பாரதிராஜா, ரஜினிக்கும் நடுவே வந்த கைகலப்பு

ஒருமுறை இளையராஜா, கங்கை அமரன், ரஜினிகாந்த், பாரதிராஜா நான்கு பேரும் ஹோட்டல் பார்ட்டியில் கலந்து கொண்டுள்ளனர். அப்பொழுது போதை தலைக்கு ஏறிய இவர்களுக்குள் சலசலப்பு ஏற்பட்டு இருக்கிறது. பாரதிராஜா ரஜினியை அடித்து விட்டாராம்.

பார்ட்டிக்கு ரஜினி தாமதமாக வந்ததாலோ, அல்லது சிகப்பு ரோஜாக்கள் படத்தில் என்னை ஏன் நடிக்கவைக்கவில்லை என பாரதிராஜாவிடம் சூப்பர் ஸ்டார் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாலோ அவர்களுக்குள் ஒரு பெரிய சண்டை வந்துவிட்டது. இதனால் ஆத்திரமடைந்த பாரதிராஜா ரஜினியை அடித்து விட்டாராம்.

இவ்வளவு பெரிய சண்டைக்கு காரணம் இந்த நாசமா போன குடிப்பழக்கம் தான் என இளையராஜா மனதில் பட்டுள்ளது. இனிமேல் இந்த பழக்கம் நமக்கு வேண்டாம் என அன்று நிறுத்தி இந்தபழக்கத்தை அதன் பின் இன்று வரை தொடவே இல்லையாம். இன்று போதை, குடிப்பழக்கம் என திரையுலகம் சீரழிந்து வருகிறது.

Trending News