திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

ஃபைட் கிளப் லோகேஷ் படமே கிடையாது.. வன்முறையின் உச்சம், இளசுகள் கொண்டாடும் பிரயோஜனம் இல்லாத குப்பை

Fight Club: ஆதித்யா தயாரிப்பில் லோகேஷ் வழங்கும் ஃபைட் கிளப் இன்று பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே இதன் ப்ரிவ்யூ ஷோவை பார்த்த சினிமா விமர்சகர்கள் அனைவரும் தாறுமாறாக புகழ்ந்து படத்தை பார்க்கும் ஆவலை தூண்டி இருந்தனர்.

அதனாலேயே இன்று ரசிகர்கள் இப்படத்தை பார்க்க தியேட்டரில் குவிந்தனர். அதை தொடர்ந்து தற்போது இளைஞர் பட்டாளங்கள் படத்தை பற்றி புகழ்ந்து தள்ளி வருகின்றனர். இதனால் படத்தின் வசூல் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

ஆனால் இப்படி கொண்டாடப்படும் இப்படத்தில் வன்முறை உச்சகட்டத்தில் இருப்பது விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் போதை பொருட்களை உபயோகிக்கும் காட்சிகள் படம் முழுக்க வருகிறது. இன்னும் சொல்லப்போனால் படத்தை பார்ப்பவர்களுக்கே அந்த நெடி மூச்சை அடைக்க வைத்திருக்கிறது.

Also read: Fight Club Movie Review- வட சென்னையின் மற்றொரு களம்.. ரத்த வாடை தெறிக்கும் ஃபைட் கிளப் எப்படி இருக்கு.? முழு விமர்சனம்

அந்த அளவுக்கு ரத்த வாடையும், போதை நெடியுமாக படம் முழுக்க பயணிக்கிறது. இதைத்தான் நடுநிலையான சினிமா விமர்சகர்கள் விமர்சித்து வருகின்றனர். ஏனென்றால் தற்போது சோசியல் மீடியாவில் ஃபைட் கிளப் படத்துக்கு பலரும் பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர்.

அவர்களுக்கெல்லாம் சிறப்பான கவனிப்பு நடந்திருக்கிறது. அதேபோன்று படத்தின் பிரமோஷனுக்காகவும் லாபத்திற்காகவும் தான் லோகேஷ் பேனரை தயாரிப்பாளர் பயன்படுத்தியுள்ளார் உண்மையில் இது லோகேஷ் படமே கிடையாது என வலைப்பேச்சு பிஸ்மி ஒரு பேட்டியில் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

Also read: தேசிய விருது வாங்கியும் கமுக்கமாக இருந்த உறியடி விஜய்.. இந்த விஷயத்துல லோகேஷியை மிஞ்சிட்டாரு!

மேலும் வட சென்னை என்றாலே வன்முறை தானா? சினிமாவில் சொல்வதற்கு வேறு நல்ல கதைகளமே கிடையாதா? அங்கு இருப்பவர்கள் அனைவரும் மாபியாக்கள் போல் இப்போதைய சினிமாக்கள் சித்தரித்து வருகின்றன. நிச்சயம் இது ஏற்றுக்கொள்ள முடியாதது. மொத்தத்தில் பிரயோஜனம் இல்லாத குப்பை போன்ற படத்தை லோகேஷ் இப்படி பிரமோஷன் செய்வது தவறு என விமர்சகர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Trending News