வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

சதுரங்க வேட்டை பாணியில் 5000 கோடி சுருட்டிய மோசடி கும்பல்.. பணத்தாசையால் சிக்கிய மாதவன், சூரி

நூதன முறையில் பண மோசடி செய்யும் கும்பல் தற்போது அதிகமாகி கொண்டே போகிறது. எச் வினோத் இயக்கத்தில் வெளியான சதுரங்க வேட்டை பட பாணியில் ஒரு திருட்டு சம்பவம் தற்போது அரங்கேறி உள்ளது. தெரிந்தோ, தெரியாமலோ இந்த சம்பவத்தில் சில சினிமா பிரபலங்களும் சிக்கியுள்ளனர்.

உழைக்காமல் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக பணத்தாசை பிடித்த நபர்களிடமிருந்து மோசடி செய்கிறார்கள். மார்க் என்ற நிறுவனம் ஒரு லட்சம் முதலீடு செய்தால் மாதம் பத்தாயிரம் தருவதாக சொல்லி சில விளம்பரங்களை நடத்தியுள்ளனர்.

Also Read : சதுரங்க வேட்டை 2 செய்த அதிரடி சாதனை!

ஆரம்பத்தில் சில நபர்கள் மட்டும் இந்நிறுவனத்தில் பண முதலீடு செய்துள்ளனர். அவர்கள் சொன்னது போல் மாதம் 10,000 வங்கி கணக்கில் வர ஆரம்பித்தவுடன் மற்ற நபர்களும் அந்த நிறுவனத்தில் பணம் முதலீடு செய்ய தொடங்கியுள்ளனர். ஆனால் ஆறு மாதங்கள் மட்டுமே பணத்தை அவர்களது வங்கி கணக்கில் செலுத்தி விட்டு மற்ற பணத்தை மொத்தமாக சுருட்டி உள்ளது அந்த கும்பல்.

அந்நிறுவனத்தில் பணம் போட்டு ஏமாந்த நபர்கள் தற்போது புகார் கொடுத்து வருகின்றனர். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் நடிகர் மாதவன், தொகுப்பாளர் கோபிநாத், சூரி மற்றும் பட்டிமன்ற நடுவர் திண்டுக்கல் லியோனி ஆகியோர் இந்நிறுவனத்திற்கு விளம்பரம் செய்துள்ளனர்.

Also Read : மாதவன் நடித்த அந்த விளம்பரம வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாக பரவி வருகிறது.

உண்மைத் தன்மையை ஆராயாமல் இதுபோன்ற முன்னணி பிரபலங்கள் பணத்தாசையால் மோசடி நிறுவனத்திற்கு விளம்பரம் செய்துள்ளனர். சினிமா பிரபலங்களே இந்த நிறுவனத்திற்கு விளம்பரம் செய்கிறார்கள் என்ற நம்பிக்கையில் பல  இதில் முதலீடு செய்வதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மார்க் நிறுவனம் இதுவரை 5000 கோடி சுருட்டி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த மோசடிகளுக்கு நிறுவனங்கள் முக்கிய காரணம் என்றாலும் மக்களின் அறியாமை மற்றும் பணத்தாசை காரணம்.

Also Read : ஹீரோவான பின்பு உடம்பை ஃபிட்டாக மாற்றிய சூரி.. இணையத்தில் ட்ரெண்டாகும் புகைப்படம்

Trending News