வீட்டுக்குள்ளே முடங்கிப் போன விக்னேஷ் சிவன்.. தேடி சென்று துக்கம் விசாரிக்கும் பிரபலங்கள்

காத்து வாக்குல ரெண்டு காதல் படத்திற்கு பிறகு விக்னேஷ் சிவன், அஜித் கூட்டணியில் ஏகே 62 படம் உருவாக இருப்பதாக லைக்கா நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது. இந்த வாய்ப்பு முழுக்க முழுக்க விக்னேஷ் சிவனுக்கு நயன்தாரா மூலம் தான் கிடைத்ததாக கூறப்பட்டது.

இதனால் விக்னேஷ் சிவன் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தது மட்டுமின்றி, தனது ட்விட்டர் பக்கத்திலும் தான் இயக்கிய படங்களின் வரிசையில் ஏகே 62 என்ற படத்தையும் சேர்த்திருந்தார். ஆனால் கடைசியில் ஏகே 62 படத்திற்கான கதை அஜித்துக்கு பிடிக்காமல் போனதால், அந்தப் பட வாய்ப்பு இயக்குனர் மகிழ்திருமேனிக்கு கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது.

Also Read: அஜித், நயன்தாராவை ஒதுக்க இதுதான் காரணமா..? தயாரிப்பாளர்களை பரிதவிக்க விடும் லேடி சூப்பர் ஸ்டார்

அதன் பிறகு விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் சோகமான ஸ்டேட்டஸை பதிவிட்டிருந்தார். அதுமட்டுமின்றி நயன்தாராவும் விக்னேஷ் சிவனை திட்டி தீர்த்திருக்கிறார். ஏனென்றால் அஜித், லைக்கா நிறுவனமும் விக்னேஷ் சிவனுக்கு கதையை தயார் செய்வதற்கு நேரம் கொடுத்தாலும் அதை சரியாக பயன்படுத்திக் கொள்ளாமல் ஏதோ குப்பை கதையை அவர்கள் முன்பு நீட்டியதால் கடுப்பாகி படத்தில் இருந்து தூக்கி விட்டனர்.

இதனால் பல கேலி கிண்டலுக்கு ஆளான விக்னேஷ் சிவன் தற்போது மன உளைச்சலில் இருப்பதாக தெரிகிறது. இதனால் அடுத்த பட வாய்ப்பை யார் கொடுப்பார்கள்? எப்படி படம் பண்ணுவது? என்று யோசித்து வருகிறாராம். இதனால் அவர் வீட்டிற்குள்ளேயே முடங்கி உள்ளார்.

Also Read: ஏகே-62 படத்தில் நான் இல்ல, உறுதி செய்த விக்னேஷ் சிவன்.. மீண்டும் இணைய வாய்ப்பிருக்கா?

இதை அறிந்த, அவருக்கு நெருக்கமான பிரபலங்கள் பலரும் தேடி சென்று ஆறுதல் அளிக்கின்றனர். வெங்கட் பிரபு, சிறுத்தை சிவா, விஜய் சேதுபதி உள்ளிட்ட பல நடிகர், நடிகைகள் விக்னேஷ் சிவனுக்கு தொலைபேசியில் வாயிலாக ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

அந்த அளவிற்கு மனம் வருத்தப்பட்டு வீட்டிற்குள்ளே இருக்கிறாராம். வெளியில் வருவதில்லை என்று கூறுகிறார்கள். இதனால் இவர் ஏதேனும் தவறான முடிவுக்கு வந்துவிடக்கூடாது என்ற எண்ணத்தில் சினிமா பிரபலங்கள் நட்பு ரீதியாக ஆறுதல் கூறி வருகின்றனர்.

Also Read: விஜய் சேதுபதி பெயரைக் சந்தி சிரிக்க வைத்த பிரபலம்.. கேடுகெட்ட வேலையை செய்த காமெடியன்

பொழுதுபோக்கு

புகைப்படங்கள்