வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

ரஜினி எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் படத்தை தயாரித்த சின்ன நடிகர்.. ஒத்த பைசா இல்லாமல் இறந்து போன சோகம்

Rajini is irretated: வாழ்க்கையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று போராடிவரும் பலருக்கும் மத்தியில் தன்னுடைய குறையை பெருசாக யோசிக்காமல் விடாமுயற்சியால் ஜெயிக்கணும்னு சின்ன நடிகர் ஒருவர் ஆசைப்பட்டிருக்கிறார். அதற்காக பெரிய ஆட்கள் மூலம் ஒரு விஷயத்தை பண்ணினால் அது எளிதாக வெற்றியடைய வாய்ப்பு இருக்கும் என்று ரஜினியை அந்த நடிகர் சந்தித்திருக்கிறார்.

அதாவது ரஜினி சூட்டிங்கில் இருக்கும்பொழுது இவரை பார்த்து எப்படியாவது பேச வேண்டும் என்று கஷ்டப்பட்டு கூட்டத்தோடு கூட்டமாக முண்டியடித்து பார்க்க போயிருக்கிறார். அப்பொழுது இவரை பார்த்ததும் அங்கே இருந்த சில பேர் ரஜினியை பார்க்கவிடாமல் விரட்டி விட்டிருக்கிறார்கள். ஆனால் ரஜினி அவரை கூப்பிட்டு பேசி இருக்கிறார்.

Also read: ஷங்கர் பேச்சை கேட்காமல் போன ரஜினி.. ராங் ரூட்டில் சிக்கி விழி பிதுங்கிய சம்பவம்

அத்துடன் உங்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும், ஏதாவது உதவி வேண்டுமா என கேட்டிருக்கிறார். அதற்கு அந்த நடிகர் எனக்கு எந்த உதவியும் வேண்டாம் உங்களை பார்த்த திருப்தியை எனக்கு போதும் என்று சொல்லி இருக்கிறார். ஆனாலும் விடாமல் ரஜினி அவரிடம் பரவாயில்லை எந்தவித தயக்கமும் வேண்டாம் என்ன விஷயமாக என்னை பார்க்க வந்தீங்க என கேட்டிருக்கிறார்.

உடனே அவர் நான் ஒரு படம் தயாரிக்கிறேன், அதை நீங்க தான் தொடங்கி வைக்கணும் என்று கூறியிருக்கிறார். இதை கேட்டதும் ரஜினி அதிர்ச்சி அடைந்திருக்கிறார். அத்துடன் செம டென்ஷன் ஆகி கையில் வைத்திருந்த தம்மை எடுத்து அடிக்க ஆரம்பித்து விட்டார். பிறகு சிறிது நேரம் யோசித்து, எதுவும் அவரிடம் சொல்லாமல் முதலில் நீ இங்கே இருந்து கிளம்பு அப்புறம் பார்க்கலாம் என சொல்லி அனுப்பிருக்கிறார்.

Also read: ரஜினி கமல் ஒரே நாளில் மோதிக்கொண்ட 5 படங்கள்.. இரண்டு படங்களில் மூக்கை உடைத்துக் கொண்ட உலகநாயகன்

அதன் பின்னர் ரஜினி, இவருடைய நிலைமையை யோசித்துப் பார்த்து ரொம்பவே பரிதாப பட்டதால் இவரின் நெருங்கிய நண்பர்களிடம் பேசி எதற்கு அவனுக்கு இந்த தேவையில்லாத வேலை. கிடைக்கிற கொஞ்ச காசை வைத்து நிம்மதியா வாழ்க்கையை ஓட்டலாம். அதை விட்டுட்டு படம் எடுக்கிறேன்னு வீணா போக வேண்டாம் முடிஞ்சா அவனைப் பார்த்து சொல்லுங்க என்று சொல்லி இருக்கிறார்.

ஆனால் அந்த நடிகர் அப்பொழுது யாருடைய பேச்சையும் கேட்க தயாராக இல்லாததால் மண்ணில் இந்த காதல் என்ற படத்தை தயாரித்தார். அவர் வேறு யாருமில்லை முந்தானை முடிச்சு படத்தில் தவக்களை ஆக வரும் சின்ன நடிகர் தான். ஆனால் ரஜினி சொன்ன மாதிரியே இந்த படத்தை எடுத்த பிறகு மொத்த காசையும் தொலைத்து விட்டு கடைசி காலத்தில் ஒத்த பைசா இல்லாமல் பரிதாபமாக இறந்து போனார்.

Also read: ஜெயிலரின் ஒரு மாத வசூலை வெளியிட்ட ஹாலிவுட் பத்திரிக்கை.. ஜவானை பின்னுக்கு தள்ளிய ரஜினி

Trending News