Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்

பேசவே முடியாத நிலையிலும் படப்பிடிப்பில் விஜய் சேதுபதி.. இப்படியொரு தொழில் பக்தியா?

பேசவே முடியாத நிலையிலும் படப்பிடிப்பில் விஜய் சேதுபதி.. இப்படியொரு தொழில் பக்தியா?

தனது எதார்த்தமான நடிப்பாலும்,அயராத உழைப்பாலும் ரசிகர்களின் மனதில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருப்பவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி.இந்நிலையில்,உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் அவர் தொடர்ந்து படப்பிடிப்பில் பங்கேற்று வருவது திரையுலகில் கவனம் பெற்றுள்ளது.


சமீபத்தில் விஜய் சேதுபதிக்கு தொண்டையில் பாதிப்பு ஏற்பட்டதாகவும்,இதனால் பேசுவதற்குக்கூட சிரமப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.இருப்பினும்,இன்னும் முழுமையாகக் குணமடையாத நிலையிலும் மும்பையில் நடைபெற்று வரும்’ஃபார்சி 2’படப்பிடிப்பில் அவர் தொடர்ந்து கலந்து கொண்டு நடித்து வருகிறார்.


இதற்கிடையில்,வார இறுதியில் சென்னை திரும்பும் அவர்,பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கவுள்ளார்.இதனைத் தொடர்ந்து,அடுத்த மாதம் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் உருவாகும் புதிய படத்திலும் அவர் இணைய உள்ளார்.


பேசுவதற்கே சிரமமானநிலையில் இருந்தாலும்,கொடுத்த வாக்குறுதியையும் தனது தொழில் மீதான அர்ப்பணிப்பையும் முதன்மையாகக் கருதி விஜய் சேதுபதி தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.அவருடைய இந்த அர்ப்பணிப்பு ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகைச் சேர்ந்த பலரிடமும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

S

Suriya

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.