புதன்கிழமை, ஜனவரி 22, 2025

வேல்ஸ் பிலிம்ஸால் கிடப்பில் கிடக்கும் 5 படங்கள்.. ஒரு வழியாக ஆர்ஜே பாலாஜிக்கு பிறந்த விடிவுகாலம்

Ishari Films International : ஐசாரி கணேஷ் வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் வெந்து தணிந்தது காடு, எல்கேஜி, கோமாளி, மூக்குத்தி அம்மன் போன்ற பல படங்களை கொடுத்துள்ளது. ஆனால் இப்போது இந்த நிறுவனத்தால் தற்போது வரை ரிலீஸ் ஆகாமல் கிடப்பில் கிடக்கிறது.

சுமோ : சிவா, பிரியா ஆனந்த் ஆகியோர் நடிப்பில் எஸ் பி ஹோசிமன் இயக்கத்தில் பல வருடங்களாக உருவாகி வந்த படம் தான் சுமோ. இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் யோகி பாபு நடித்திருக்கிறார். சுமோ படம் இந்த வருடம் கண்டிப்பாக திரையரங்குகளில் ரிலீஸாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜோஷ்வா இமை போல் காக்க : பிக் பாஸ் மூலம் பிரபலமடைந்த வருண், ராகி, யோகி பாபு ஆகியோர் நடிப்பில் 2019 தொடங்கப்பட்ட படம் தான் ஜோஷ்வா இமை போல் காக்க. வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ஐசாரி கணேஷ் இந்த படத்தை தயாரித்திருந்தார். 2020 ஆம் ஆண்டு இந்த படம் வெளியாக இருந்த நிலையில் கோவிட் தொற்று காரணமாக ரிலீஸ் தள்ளி போனது.

Also Read : பிக் பாஸ் சீசன் 7ல் பணப்பெட்டியை தூக்கியது இவர் தான்.. மக்களை ஏமாற்றிய வெற்றி போட்டியாளர்

சிங்கப்பூர் சலூன் : கோகுல் இயக்கத்தில் ஐசாரி கணேஷ் தயாரிப்பில் ஆர்ஜே பாலாஜி நடிப்பில் சிங்கப்பூர் சலூன் படம் உருவாகி வருகிறது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பின் போது இயக்குனர் மற்றும் ஆர்.ஜே பாலாஜி இடையே மோதல் ஏற்பட்டிருந்தது. இதனால் படம் தாமதித்து வந்த நிலையில் ஜனவரி 25 ரிலீஸ் ஆகும் என்று கூறப்படுகிறது.

PT Sir : ஹிப் ஹாப் புகழ் ஆதி ஐசாரி கணேஷ் தயாரிப்பில் பிளாக் ஷிப் யூ யூடியூப் சேனல் மூலம் புகழ்பெற்ற கார்த்திக் வேணுகோபால் இயக்கத்தில் பிட்டி சார் படத்தில் ஒப்பந்தமானார். இந்த படம் ரிலீஸ் ஆகாமல் தற்போது வரை இழுத்துக் கொண்டிருக்கிறது.

மேதாவி : ஜீவா, ராசி கண்ணா மற்றும் அர்ஜுன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வந்த படம் தான் மேதாவி. இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பித்த நிலையில் கோவிட் காரணமாக படப்பிடிப்பு தாமதமானது. அதன் பிறகு இந்த படத்தை பற்றிய இந்த தகவலுமே வெளியாகாமல் கிடப்பில் போடப்பட்டது.

Also Read : தங்க தட்டில் பிறந்த ஜீவாவின் சொத்து மதிப்பு.. டைம்பாஸுக்காக சினிமாவில் கலக்கும் வாரிசுகள்

Trending News