செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

ஓவர் ஹீரோயிசத்தால் ரசிகர்களிடம் அசிங்கப்பட்ட 5 படங்கள்.. டெபாசிட் இழந்த சூப்பர் ஸ்டாரின் படம்

Actor Rajini: படத்தில் கதை ஒன்றுமில்லை என்றாலும் ஹீரோவைக் கொண்டு பில்டப் செய்வது வழக்கமாகி உள்ளது. அதிலும் படம் வெளிவருவதற்கு முன்பே இதன் அப்டேட்டை கொண்டு படம் இப்படி இருக்கும் அப்படி இருக்கும் என யூகிக்க தொடங்கி விடுகின்றனர்.

மேலும் படம் வெளிவந்த பிறகு அதன் எதிர்பார்ப்பு படத்தில் இல்லாவிட்டால் அதை மீம்ஸ் கொண்டு கலாய்ப்பது வாடிகையாக்கிவிட்டது. அவ்வாறு ஓவர் பில்டப் கொடுத்து மொக்கை வாங்கிய 5 படங்களை பற்றி இங்கு காண்போம்.

Also Read: உண்மையை மறைக்கும் தனம், மீனா.. செண்டிமெண்ட் சீனயை வைத்து உருட்டும் பாண்டியன் ஸ்டோர்ஸ்

விவேகம்: 2017ல் அஜித், விவேக் ஓபராய், காஜல் அகர்வால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த படம் தான் விவேகம். இப்படத்தில் வில்லனுக்குரிய கதாபாத்திரத்தையும் ஹீரோவே ஏற்று நடித்திருப்பார். மேலும் சென்டிமண்டாய் இடம்பெறும் காட்சிகளும் மீம்ஸ்க்கு உள்ளாகியது. ஆக்சன் படத்தில் அஜித்தின் நடிப்பு பெரிதாக பேசப்பட்டாலும், எதிர்பார்த்த வசூலை இப்படம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சுறா: 2010ல் எஸ் பி ராஜ்குமார் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் சுறா. இப்படத்தில் விஜய், தமன்னா, வடிவேலு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். வில்லன் கதாபாத்திரத்தில் தேவ் கில் இடம் பெற்றிருப்பார். வில்லனுக்குரிய தன்மை இல்லாது, எப்பொழுதும் ஹீரோவிடம் அடி வாங்குவது போன்று காட்டப்பட்டிருக்கும். மேலும் சுறாவைப் போன்று விஜய் கொடுத்த என்ட்ரி அதிக லெவலில் மீம்ஸ் போடப்பட்டது.

Also Read: அப்பாவின் மேல் இருக்கும் கோபத்தை படத்தில் காட்டிய விஜய்.. தளபதி நடிப்பை மோசமாக விளாசிய இயக்குனர்

லிங்கா: 2014ல் பொன் குமரன் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் லிங்கா. இப்படத்தில் ரஜினி, அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா ஆகிய முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். ரஜினியின் படம் என்பதால் பில்டப் கொடுப்பதாக நினைத்து கிளைமாக்ஸ் இல் பாராசூட் காட்சிகள் இடம் பெற்றிருக்கும். அது மக்களிடையே விமர்சனத்திற்கு ஆளாகியது. மேலும் இப்படம் பட்ஜெட்டில் பெரும் நஷ்டத்தை அடைந்தது.

அன்பானவன் அசராதவன் அடங்காதவன்: 2017ல் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளிவந்த காமெடி கலந்த ஆக்சன் படம் தான் அன்பானவன் அசராதவன் அடங்காதவன். இப்படத்தில் திரைக்கதை, வசனம், காமெடி போன்ற எதுவுமே பெரிதும் பேசப்படாமல் எதிர்மறை விமர்சனங்களை பெற்று, இப்படம் கடும் தோல்வியை சந்தித்தது.

Also Read: மகன்களுக்கு எமனாய் அமைந்த 5 தந்தைகள்.. ஒரு காலத்தில் எஸ்டிஆர் கேரியரை கேள்விக்குறியாக்கிய டி ஆர்

ஆம்பள: 2015ல் சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்த படம் தான் ஆம்பள. இப்படத்தில் ஹன்சிகா மோத்வானி, பிரபு, ரம்யா கிருஷ்ணன், கிரண், விஷால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இப்படத்தில் எதார்த்தத்திற்கு புறம்பாக இவர்கள் அமைத்த காட்சிகள் மக்களிடையே பெரும் குழப்பத்திற்கு ஆளாகி கலவையான விமர்சனங்களை பெற்று தந்தது.

Trending News