Balaji: பிக் பாஸ் நான்காவது சீசன் போட்டியாளர் பாலாஜி சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்று இணையத்தில் வைரல் ஆகிறது.
பிக்பாஸ்க்கு பிறகு ஒன்று, இரண்டு படங்களில் தலைகாட்டி வந்த பாலாஜி ஃபயர் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.
இந்த படத்தின் முதல் நாள் முதல் காட்சி தியேட்டரில் பார்த்த பிறகு பத்திரிகையாளர்களிடம் பாலாஜி பேசி இருக்கிறார்.
பிக்பாஸ் பாலாஜி கண்ணீர்
எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு நெகட்டிவிட்டி உள்ளது. பணம் வைத்துக்கொண்டு திறமையே இல்லாதவர்களுக்கு கூட எந்த பிரச்சனையும் வருவதில்லை என கண்ணீருடன் கூறி இருக்கிறார்.
பாலாஜி தனக்கு பெர்சனல் ஆக நெகட்டிவிட்டி உள்ளது போல் நினைத்துக் கொள்கிறார். உண்மையில் அந்தப் படத்தில் அவர் ஏற்று நடித்த கதாபாத்திரத்திற்கு தான் அவ்வளவு நெகட்டிவிட்டி.
அதிலும் ரச்சிதாவுடன் இவர் நெருக்கமாக நடித்திருந்த பாடல் காட்சி முன்னமே வெளியாகி இந்த படத்திற்கு அதிக நெகட்டிவிட்டியை ஏற்படுத்தி விட்டது.
அதுமட்டுமில்லாமல் ஏற்கனவே பிக் பாஸ் நான்காவது சீசனில் பாலா தேவையில்லாமல் அந்த சீசன் டைட்டில் வின்னர் ஆரியை பல இடங்களில் பகைத்துக் கொண்டார்.
ஆரி மக்களிடையே அதிக செல்வாக்கு பெற்றிருந்தார். அவரை அந்த அளவுக்கு வார்த்தைகளால் கஷ்டப்படுத்திய நெகட்டிவிட்டி தான் இன்று வரை பாலாஜியை அவரை தொடர்ந்து கொண்டிருக்கிறது.