திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

முதல் மற்றும் கடைசி நேஷனல் அவார்ட் வாங்கிய படங்கள்.. வசூலை குவித்து படைத்த சாதனை

தமிழ் சினிமாவின் இதுவரை வெளியான படங்களில் முதலும் கடைசியுமாக நேஷனல் அவார்ட் வாங்கிய இரண்டு படங்கள் தமிழ் சினிமாவை இன்றும் திரும்பி பார்க்க வைக்கும் படங்களாக உள்ளது.

மலைக்கள்ளன்: 1954 ஆம் ஆண்டு எஸ். எம். ஸ்ரீராமுலு நாயுடு இயக்கத்தில் வெளிவந்த மலைக்கள்ளன் திரைப்படம் எம்ஜிஆர் மற்றும் பானுமதி நடித்து அசத்திய முதல் அவார்ட் வாங்கிய படம். இந்த படத்திற்காக தமிழக அரசின் உயரிய விருதான நேஷனல் அவார்டு வழங்கப்பட்டது.

முதன் முதலில் 6 மொழியில் தயாரிக்கப்பட்டது இந்தப் படம். கிட்டத்தட்ட 150 நாட்கள் ஓடி வரலாறு படைத்தது. அப்போது அதிக அளவு வருமானம் பெற்று தந்த படம் மலைக்கள்ளன். அந்தக் காலத்திலேயே இந்த படம் சுமார் 90 லட்சம் ரூபாய்க்கு வசூலித்து சாதனை படைத்தது.

எனவே இந்தப் படம் குடியரசு விருது பெற்ற முதல் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது அத்துடன் இந்த படத்திற்கு மு கருணாநிதி அவர்கள் எழுதிய வசனம் படத்திற்கு கூடுதல் வலு சேர்த்து திரையரங்கையே மிரள விட்டிருக்கும்.

அசுரன்: 2019ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த இந்தப் படத்தில் தனுஷ், மஞ்சு வாரியர், கென் கருணாஸ், அம்மு அபிராமி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். அசுரன் படத்தில் சிறப்பாக நடித்திருந்த தனுசுக்கு தேசிய அளவில் சிறந்த நடிகர் என்ற பெயரையும் வாங்கித் தந்தது. இந்த படத்திற்கு தேசிய விருது வழங்கப்பட்டது.

தனுஷின் நடிப்பு இந்தப் படத்தில் பெரிதும் கவரப்பட்டது. அதேபோல் அந்த கதாபாத்திரத்திற்கு எழுதப்பட்ட வரிகள் இந்த படத்திற்கு கூடுதல் சிறப்பாக பார்க்கப்பட்டது. இந்தப்படம் பூமணி எழுதிய வெக்கை என்ற புதினத்தின் அடிப்படையாகக்கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படமாகும்.

இவ்வாறு 1954-ஆம் ஆண்டு வெளிவந்த மலைக்கள்ளன் திரைப்படம் நேஷனல் அவார்ட் வாங்கிய பிறகு, 65 ஆண்டுகளுக்குப் பிறகுதான் 2019ஆம் ஆண்டு அசுரன் திரைப்படம் நேஷனல் அவார்ட் வாங்கியிருக்கிறது என்பது தற்போது ஆச்சரியமாக பார்க்க கூடிய விசயமாகும்.

Trending News