வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

சங்கரா சங்கரா என்றால் சாதம் வாயில் வந்து விழுமா.? முதல்ல அனுமார், இப்ப ராமர்.. ஆதிபுருஷ் தல தப்புமா!

Actor Prabhas: பாகுபலி நாயகன் பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் ஆதிபுருஷ் வரும் 16ஆம் தேதி திரையரங்குகளை அலங்கரிக்க இருக்கிறது. இதற்காக தற்போது தீவிர ப்ரமோஷனில் ஈடுபட்டு வரும் பட குழு பல புதுப்புது விஷயங்களை கையில் எடுத்து ரசிகர்களை இம்ப்ரஸ் பண்ண முயற்சி செய்து கொண்டிருக்கிறது.

ஆனால் அவை அனைத்தும் விழலுக்கு இறைத்த நீர் போல் தான் மாறிக் கொண்டிருக்கிறது. அதாவது ராமாயண காவியத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் இப்படம் 500 கோடி பட்ஜெட்டில் தெலுங்கு, ஹிந்தி, தமிழ் உட்பட ஐந்து மொழிகளில் வெளியாக இருக்கிறது. இதுவே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்திய நிலையில் கடந்த ஆண்டு படக்குழு வெளியிட்ட டீசர் எதிர்மறை விமர்சனங்களை சந்தித்தது.

Also read: அதர்மத்தை கூண்டோடு வேரறுக்க வரும் ஆதிபுருஷ் கடைசி ட்ரெய்லர்.. பயத்துடன் வெளியிட்ட பிரபாஸ்

இதனால் பயந்து போன பட குழு டெக்னாலஜி விஷயத்தில் இன்னும் கொஞ்சம் அதிக கவனம் எடுத்து சமீபத்தில் முதல் ட்ரெய்லரை வெளியிட்டு இருந்தனர். அதற்கு ஓரளவுக்கு பலன் கிடைத்த நிலையில் அடுத்த ட்ரெய்லரையும் வெளியிட்டு ரசிகர்களின் ஆதரவை பெற முயன்றனர். ஆனாலும் ஆடியன்ஸ் எதிர்பார்க்கும் ஏதோ ஒன்று படத்தில் குறைவதாகவே தெரிகிறது.

அதன் காரணமாகவே இப்போது படத்திற்கான எதிர்பார்ப்பும் குறைந்து இருக்கிறது. இதனால் மரண பீதியில் இருக்கும் பட குழு எப்படியாவது படத்தை ஓட வைக்க வேண்டும் என்றும் போட்ட காசை எடுத்து விட வேண்டும் என்ற பதட்டத்திலும் வித்தியாசமான ப்ரமோஷனை செய்து வருகின்றனர். அதாவது சமீபத்தில் ஆதிபுருஷ் திரையிடப்படும் திரையரங்குகளில் எல்லாம் அனுமாருக்காக ஒரு தனி இருக்கை காலியாக விடப்படும் என அறிவித்திருந்தது.

Also read: ராவணனின் கர்வத்தை முறியடிக்கும் ராமன்.. பிரம்மாண்ட கிராபிக்ஸ், பிரபாஸின் மிரட்டும் ஆதிபுருஷ் ட்ரெய்லர்

சென்டிமென்ட் ஆக பட குழு செய்த இந்த விஷயம் சோசியல் மீடியாவில் பெருமளவில் கலாய்க்கப்பட்டது. அது மட்டுமின்றி ஓடாத படத்திற்கு எதற்கு இவ்வளவு பில்டப் என பலரும் கேலி செய்து வந்தனர். இந்த அலை இப்போது ஓய்ந்திருக்கும் நிலையில் தற்போது அடுத்த விவகாரம் பெரிதாக வெடித்துள்ளது. அதாவது கம்பம் மாவட்டத்தில் இருக்கும் ஒவ்வொரு ராமர் கோவிலுக்கும் 101 டிக்கெட் இலவசமாக வழங்கப்படும் என்று ஷ்ரேயாஸ் மீடியா தலைவர் ஸ்ரீனிவாஸ் தற்போது அறிவித்துள்ளார்.

இதுதான் இப்போது பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது. முதலில் அனுமார், இப்போ ராமரை வைத்து படத்தை ஓட வைக்க பார்க்கிறீர்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மேலும் சங்கரா சங்கரா என்றால் சாதம் வாயில் வந்து விழுமா, அப்படித்தான் இருக்கிறது இந்த பிரமோஷனும். படம் நன்றாக இருந்தால் இப்படி மெனக்கெடவே தேவையில்லை என்ற கருத்துக்களும் அதிர்வலையை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் தல தப்புமா என்ற பயத்தில் இப்போது ஆதிபுருஷ் டீம் இருக்கிறது.

Also read: போஸ்டருடன் வெளியானது ஆதிபுருஷ் படத்தின் ரிலீஸ் தேதி.. பிரபாஸ் பிறந்தநாளுக்கு கிடைத்த டபுள் ட்ரீட்

Trending News