வியாழக்கிழமை, நவம்பர் 14, 2024

கோட் படத்தின் முதல் நாள் வசூல் கணிப்பு.. 5000 ஸ்கிரீனில் 4 நாட்களிலே போட்ட பணத்தை அள்ளும் தளபதி

Goat: விஜய் சினிமாவிற்கு குட் பாய் சொல்லிய தருணத்திலிருந்து இனி இவரை திரையரங்களில் பார்க்க முடியாதா என்று ரசிகர்கள் ரொம்பவே ஏக்கத்துடன் இருந்து வருகிறார்கள். அதனால் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவர இருக்கும் கோட் படத்தை பார்ப்பதற்கு ஒட்டுமொத்த ரசிகர்களும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் வருகிற 5ம் தேதி அனைத்து திரையரங்களிலும் கோட் படம் ரிலீஸ் ஆகப்போகிறது.

இதில் முக்கியமான கதாபாத்திரத்தில் பிரசாந்த், சினேகா, லைலா, பிரபுதேவா, மோகன் மற்றும் பலர் இணைந்து நடித்திருக்கிறார்கள். அத்துடன் கேமியோ கேரக்டரில் இன்னும் ஐந்து பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள் என்று தகவல் வந்திருக்கிறது. அந்த வகையில் AI தொழில் நுட்பத்துடன் விஜயகாந்த் இடம்பெற்று இருக்கிறது.

4 நாட்களிலே ஹவுஸ் ஃபுல்லான கோட் படம்

அதே மாதிரி சிவகார்த்திகேயன், தோனி, வெங்கட் பிரபுவும் இதில் வருகிறார்கள். இவர்களுடன் சேர்ந்து ஒரு பாடலுக்கு த்ரிஷாவும் கேமியோ ரோல் பண்ணி இருக்கிறார். அத்துடன் வெங்கட் பிரபு எல்லா படத்திலும் கூட்டிட்டு வருவது போல் அவருடைய நண்பர்களையும் இந்த படத்திற்கும் அழைத்து வந்திருக்கிறார். இப்படி பல ஆர்டிஸ்ட்களை வைத்து உருவாக்கி இருக்கும் கோட் படம் நிச்சயம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என்று மொத்த டீமும் தனித்தனியாக பேட்டியில் கூறி வருகிறார்கள்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் இன்னொரு பக்கம் ஆன்லைன் டிக்கெட் புக்கிங் வேகமாக போய்க்கொண்டிருக்கிறது. அந்த வகையில் முதல் ஐந்து நாளுக்கு டிக்கெட் கிடைக்காத அளவிற்கு அனைத்துமே ரிசர்வேஷன் செய்யப்பட்டு விட்டது. மொத்தமாக உலக அளவில் 5000 ஸ்கிரீனில் கோட் படம் ரிலீஸ் ஆகப்போகிறது என்று இப்படத்தின் தயாரிப்பாளர் கூறியிருக்கிறார்.

அந்த வகையில் படம் வெளிவந்த முதல் நான்கு நாட்களிலேயே போட்ட பணத்தை எடுக்கும் விதமாக வசூல் தாறுமாறாக போகப் போகிறது. இப்படத்தை 400 கோடி செலவு செய்து எடுத்து இருக்கிறார்கள். உலக அளவில் முதல் நாள் வசூல் கணிப்பின்படி 100 கோடி வசூலை அடைந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் 4 நாட்களில் 400 கோடியே அசால்டாக தூக்கிவிடுவார்கள்.

ஏற்கனவே திரையரங்க உரிமையாளர்களிடமிருந்து 53 கோடிக்கு விற்பனை செய்ததாக தயாரிப்பாளர் தகவலை வெளியிட்டு இருக்கிறார். அத்துடன் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட ஸ்ட்ரீமிங் உரிமையை Netflix 125 கோடிக்கும் ஹிந்தியில் வெளியிட 25 கோடியும் கொடுத்து வாங்கி இருக்கிறார்கள். சேட்டிலைட் உரிமையை ஜீ தமிழ் 93 கோடிக்கு வாங்கி இருக்கிறது. ஆக மொத்தத்தில் படம் ரிலீசுக்கு முன்னே தளபதி வைத்து போட்ட காசை எடுத்து விட்டார் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி.

- Advertisement -spot_img

Trending News