புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

ரிலீஸ் நாளிலேயே இணையத்தில் லீக்கான கொலை.. தல தப்புமா.? முதல் நாள் வசூல் ரிப்போர்ட்

Kolai Movie Collection Report: பாலாஜி குமார் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, ரித்திகா சிங், ராதிகா ஆகியோர் நடிப்பில் நேற்று கொலை படம் வெளியானது. டீசர், இரண்டு ட்ரெய்லர் என அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டிய இப்படம் ரிலீஸ் நாளிலேயே இணையத்தில் லீக் ஆகி இருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வகையில் விஜய் ஆண்டனி ஒரு கொலையை எப்படி துப்பறிந்து கண்டுபிடிக்கிறார் என்பதை திகில் கலந்து மர்மமாக சொல்லியிருக்கும் இயக்குனருக்கு இப்போது பாராட்டுக்கள் கிடைத்து வருகிறது. அதிலும் ஹாலிவுட் தரத்தில் இருக்கும் மேக்கிங் வித்தியாசமான அனுபவத்தையும் கொடுத்துள்ளது.

Also read: Kolai Movie Review- ஹாலிவுட் தரத்தில் மிரட்டும் விஜய் ஆண்டனி.. கொலை எப்படி இருக்கு.? முழு விமர்சனம்

இப்படி படத்தில் பல விஷயங்கள் பாசிட்டிவாக இருந்தாலும் சில குறைகள் இருக்கத்தான் செய்கிறது. எனினும் இந்த கொலை க்ரைம் திரில்லர் விரும்பிகளுக்கு சரியான படமாகவே இருக்கிறது. இதுவே இப்படம் இணையத்தில் கசிவதற்கு ஒரு காரணமாகவும் இருக்கிறது.

அந்த வகையில் முதல் நாளில் இப்படத்திற்கு வேற லெவல் எதிர்பார்ப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில் படம் 50 லட்சம் வரை மட்டுமே வசூலித்திருக்கிறது. இது எதிர்பார்ப்புக்கு கொஞ்சம் கம்மியாக இருந்தாலும் வார இறுதி நாளில் இதன் வசூல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also read: திகிலூட்டும் மர்மம், விஜய் ஆண்டனியின் படம் கொலையா இல்ல தற்கொலையா? படம் எப்படி இருக்கு.? ட்விட்டர் விமர்சனம்

அதே நேரத்தில் நேற்று வெளியான அநீதி, பார்பி, ஓப்பன் ஹெய்மர் ஆகிய படங்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இப்படி இந்த வாரம் பல படங்கள் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. அதில் ஹாலிவுட் படங்களும் தமிழ்நாட்டில் சக்கை போடு போட்டு வருகிறது.

இப்படியாக பல போட்டிகளுக்கு நடுவில் வெளியாகி இருக்கும் கொலை முதல் நாளிலேயே கடும் சோதனையை சந்தித்துள்ளது. அந்த வகையில் தற்போது போட்ட காசை எடுத்து இப்படம் தலை தப்புமா, விஜய் ஆண்டனிக்கு வெற்றியை கொடுக்குமா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Also read: Aneethi Movie Review- ரத்தம் தெறிக்க சமூக அரசியலை தோலுரித்த வசந்தபாலனின் அநீதி.. தேருமா முழு விமர்சனம்?

Trending News